Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் இப்படி ஒரு இடமா – அமெரிக்காவின் கிராண்ட் கேன்யனை போலவே இருக்கும் ‘கடியா த்ரோ’

இந்தியாவில் இப்படி ஒரு இடமா – அமெரிக்காவின் கிராண்ட் கேன்யனை போலவே இருக்கும் ‘கடியா த்ரோ’

எல்லோருக்குமே கிராண்ட் கேன்யன் (Grand Canyon) என்று சொன்னால் நினைவுக்கு வருவது என்னவோ அமெரிக்காவில் இருக்கும் கிராண்ட் கேன்யன் எனும் பெரிய பள்ளத்தாக்கு அமைப்பு தான், ஏனென்றால் அங்கு மட்டும் தான் அது இருக்கிறது! பார்ப்பதற்கு அச்சு அசலாக அமெரிக்காவின் பெரும் பள்ளத்தாக்கை போலவே இந்தியாவில் ஒரு இடம் இருக்கிறது தெரியுமா? அதிகம் அறியப்படாத இந்த இடம் சுற்றுலாப் பயணிகளால் இன்னும் தீண்டப்படாமல் இருக்கிறதாம்!

இந்தியாவின் கிராண்ட் கேன்யன்

இனி கிராண்ட் கேன்யனைக் காண அமெரிக்காவுக்கு தான் செல்ல செண்டும் என்று அர்த்தம் இல்லை. அச்சு அசல் அதனைப் போன்றே இருக்கிற ஒரு இயற்கை அதிசயம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜுராசிக் காலத்தின் பிற்பகுதியில் இருந்து பல கட்ட டெக்டோனிக் இயக்கங்களின் விளைவாக குஜராத்தின் கட்ச் நிலபரப்பில் உருவாகியுள்ள இந்த நிலப்பரப்பு மிகவும் தனித்துவமானது.

1

குஜராத்தில் அமைந்துள்ள அழகிய பள்ளத்தாக்கு

குஜராத்தின் கட்ச் பகுதிக்கு நீங்கள் செல்லும்போது இந்த இடமும் நிச்சயமாக உங்கள் பயணத் திட்டத்தில் இருக்க வேண்டும். நதியும், பாறை அமைப்புகளும் ஒன்று சேர்ந்து இந்த இடத்தின் அழகைக் கூட்டுகின்றன. இதன் தனித்துவத்தைப் பற்றி இங்கே தெரிந்துக் கொள்வோம்!

அமெரிக்காவின் கிராண்ட் கேன்யனைப் போலிருக்கும் கடியா த்ரோ

அமெரிக்காவின் அரிசோனாவில் கொலராடோ ஆற்றில் இருப்பதைப் போன்ற காளான் வடிவ பாறைகளை நாம் இங்கேயும் காணலாம். அடடா? என்ன விசித்திரம்? இது எப்படி சாத்தியம் என்ற எண்ணம் நம்மை விட்டு நிச்சயம் அகலாது. இங்கு காணப்படும் பாறைகள் மற்றும் சிகரங்களின் பல்வேறு வண்ணங்கள் உண்மையிலேயே புதிரானவை மற்றும் நம் கண்களுக்கு விருந்தளிக்கக் கூடியவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நியூயார்க் டைம்ஸில் குறிப்பிடப்பட்டுள்ள இடம்

நியூயார்க் டைம்ஸ் உலகம் முழுவதிலுமிருந்து 2,000 இடங்களை மதிப்பாய்வு செய்த பிறகு "2021 இல் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலை" வெளியிட்டது. அதில் இந்த அழகிய மறைக்கப்பட்ட ரத்தினமான கடியா த்ரோவும் இடம் பெற்றிருந்தது.

2

அதிகம் அறியப்படாத இயற்கை அழகு

கட்ச்சின் பல்வேறு பகுதிகளிலிருந்து உள்ளூர்வாசிகள் இந்த இடத்திற்கு வருகை தருகின்றனர், ஆனால் இது இன்னும் உரிய கவனத்தைப் பெறவில்லை. நியூயார்க் டைம்ஸில் வெளிவருவதற்கு முன்னால் வரை இந்த இடத்தைப் பற்றி பெரும்பாலானோர் அறிந்திருக்கவில்லை. ஆனால் இது நம் வாழ்வில் ஒருமுறையேனும் பார்த்துவிட வேண்டும் என்று ஏங்கக்கூடிய இடங்களில் ஒன்றாகும்.

நீங்கள் குஜராத் சென்றால் இந்த இடத்திற்கு செல்ல மறக்காதீர்கள்

திறமையான கைவினைஞர்கள், வண்ணமயமான பழங்குடி கிராமங்கள், அன்பான உள்ளூர்வாசிகள் மற்றும் ஒளிரும் வெள்ளை மணல் ரான் ஆஃப் கட்ச் இன் மயக்கக்கூடிய அழகில் ஒரு ரத்தினமாக சேர்ந்துக் கொண்ட கடியா த்ரோவை நீங்கள் குஜராத் சென்றால் காண மறக்காதீர்கள்.

அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மிக அழகான இயற்கை சுற்றுலாத் தலம் புஜில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த அழகிய இடம் சமீபத்தில் தான் வருண் சுச்டே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு இது கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி வருகிறது. நீங்களும் கட்டாயம் இந்த இடத்திற்கு சென்று பாருங்கள். நிச்சயம் அதன் அழகில் பிரமித்து உங்களை தொலைப்பீர்கள்.

More News

    Read more about: travel guide gujarat
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+