Search
  • Follow NativePlanet
Share
» »தலைவர், தல, தளபதி ரசிகர்களான உங்களுக்கு பின்னி மில் பத்தி தெரியாம இருக்குமா?

தலைவர், தல, தளபதி ரசிகர்களான உங்களுக்கு பின்னி மில் பத்தி தெரியாம இருக்குமா?

தல தளபதியை இணைக்கு அந்த இடம் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா. அது எங்க இருக்கு

By Udhaya

பின்னி மில்...சென்னையில் இருக்கும் சினிமா விரும்பிகள் பெரும்பாலாவர்களுக்கு தெரிந்த இடம். சுற்றுலா தளத்தில் இடம்பெறும் அளவுக்கு அங்கு என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.

மற்ற நாட்களில் போனால் பாலடைந்த பங்களாவிற்குள் போன வடிவேலுவின் கதைதான் உங்களுக்கு. யாருமே இல்லாமல் அநாதையாக பூட்டிக்கிடக்கும் பின்னி மில், சினிமா ஷூட்டிங் என்றவுடன் திருமண அறிவிப்பைக் கேட்ட சின்னத்தம்பி போல குதூகலமாகிவிடும்.

படப்பிடிப்பு தளம் என்றவுடன் உங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி வருகிறதல்லவா. இங்கு எந்த படங்களெல்லாம் எடுத்திருக்கிறார்கள் என்று கேட்டால் உங்களால் சொல்லமுடியுமா?

சரி அதற்கு முன் பின்னி மில்லை பற்றிய சிறு பார்வை ஒன்றை காணலாம்.

இந்த பின்னி மில் சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளது. சுற்றுலாத் தளம் என்று சொல்லும் அளவுக்கு இல்லாவிட்டாலும், ஒரு பொழுதுபோக்கும் தளமாக உள்ளது. அநேக நேரங்களில் இங்கு படப்பிடிப்பு நடத்தப்படும்.

சென்னை மீனம்பாக்கம் லோக்கல் ரயிலில் பயணம் செய்து கொண்டு பார்க்கும்போது இந்த பின்னி மில்லை பார்க்கமுடியும்.

மீனம்பாக்கம் ஜெய்ன் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள பின்னி மில் 1900 களில் ஆரம்பிக்கப்பட்டது. இது ஒரு துணி நூற்பாலையாக இருந்துள்ளது. வெள்ளையர்கள் கொண்டு வந்த இந்த பின்னி மில், பிற்காலத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு பூட்டப்பட்டுள்ளது.

இந்த பின்னி மில்லில் ஆவிகள் அலைகிறது என்றும் விசித்திரமான சத்தம் கேட்கும் என்றும் பலர் கூறுகிறார்கள். மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பார்க்கும்போது ஒரு பாலடைந்த கட்டடம் சிறிதாக தெரியும்.

எது எப்படியோ, நீங்கள் பார்த்த அல்லது இனி பார்க்கப் போகிற பெரும்பாலான படத்தின் சண்டைக் காட்சிகள் இங்குதான் எடுக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, சிம்புவின் லவ் ஆந்தம்,
மிருதன், ஆரண்ய காண்டம், சக்கரைக்கட்டி, கந்தசாமி, வாண்டடு,
7ம் அறிவு, வேட்டை, ராஜபாட்டை போன்ற படங்கள் இங்கு எடுக்கப்பட்டுள்ளனவாம். முடிந்தால் இந்த படங்களில் வரும் பின்னி மில்லின் காட்சியை இங்கு கமண்டுங்க பாக்கலாம்...

சரி. தமிழ் பயண இணையதள நேயர்களுக்காக ஒரு சின்ன விளையாட்டு. கீழ்காணும் படங்களில் வரும் இடங்கள் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடித்தவைதான். முதல் படம் கேள்வியாகவும், அடுத்த படம் விடையாகவும் இருக்குமாறு பொருத்தப்பட்டுள்ளது.

நீங்கள் தலைவர், தல, தளபதி இவர்களின் தீவிர ரசிகர்களானால் கண்டுபிடிங்க பாக்கலாம்....

என்ன இடம்னு தெரியுதா

என்ன இடம்னு தெரியுதா

நல்லா யோசிங்க என்ன படம்னு... இந்த இடத்த பாத்துருக்கீங்களா

தெரியவில்லையா சரி அடுத்த படத்துல விடை இருக்கு.

சிவாஜி

சிவாஜி

கண்ணா பன்னிங்கதான் கூட்டமா வரும்.... சிங்கம் சிங்களாத்தான் வரும்னு டயலாக் பேசி ஃபைட்டர்கள பறக்கவிடுவாரே தலைவர்... இந்த காட்சி பின்னி மில்லில் தான் படமாக்கப்பட்டுள்ளது.

சரி அடுத்த படத்த கண்டுபிடிங்க...

இந்த படம் என்னனு சொல்லுங்க பாக்கலாம்

இந்த படம் என்னனு சொல்லுங்க பாக்கலாம்

கண்டுபிடிக்க முடியுதா... சரி தளபதி ரசிகர்களே... உங்களுக்கும் தெரியலயா

விடை அடுத்த படத்தில்...

இளைய தளபதி

இளைய தளபதி

யார் அடிச்சா பொறி கலங்கி பூமி அதிர்ரது கண்ணுல தெரியுதோ அவன்தான் தமிழ் னு தளபதி பஞ்ச் அடிக்குற அதே போக்கிரி படம்தான்

சரி அடுத்த படத்த கண்டுபிடிங்க...

சரி இது யாருன்னு கண்டுபிடிச்சிட்டீங்களா

சரி இது யாருன்னு கண்டுபிடிச்சிட்டீங்களா

ஒரே இருட்டா இருக்கு எப்படி கண்டுபிடிக்க.. சரி உங்களுக்கு ஒரு க்ளூ.

வேலு....

வேலு

வேலு

வேலு...வேலாயுதம்... கெட்டவங்கள அழிக்க வேலாயுதம் வந்துட்டாரு... நா சொல்லல இந்த சீன் ல ஒரு பொண்ணு அப்படித்தான் பா சொல்லும்.

எனக்கு முன்னாடியே தெரியும்னு தான சொல்றீங்க... அடுத்த படத்துக்கு வாங்க..

இந்த இடம் எந்த படத்தில் வரும்னு சொல்லுங்க பாக்கலாம்?

இந்த இடம் எந்த படத்தில் வரும்னு சொல்லுங்க பாக்கலாம்?

கண்டு பிடிச்சிட்டீங்களா....

தெறிக்க விடலாமா....

தெறிக்க விடலாமா....

அதானே நம்ம சுண்டு விரல வச்சே கண்டு பிடிச்சிருவோமே...

வேதாளம்

வேதாளம்

நா காசுக்காக என்ன வேணா பண்ணுவேன்... ஆனா... தன்மானத்துக்கு ஒரு தகராறுன்னா... தலயே போனாலும்......

More News

    Read more about: travel பயணம்
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+