வியட்நாமில் உள்ள 'ஹான் சன் டூங்' குகை பாதை தான் உலகின் மிகப்பெரிய குகை பாதையாகும். 1990 ஆம் ஆண்டில் ஹோ கான் - ஃபோங் நா என்ற மனிதரால் தான் இந்த 'ஹான் சன் டூங்' குகை கண்டுபிடிக்கப்பட்டதாம். 2013 ஆம் ஆண்டில், கின்னஸ் உலக சாதனை அமைப்பு இதை உலகின் மிகப்பெரிய இயற்கை குகையாக பதிவு செய்தது. 9 கிமீ நீளம், 200 மீட்டருக்கு மேல் உயரம் மற்றும் அளவு 38.5 மில்லியன் கன மீட்டர்கள் அளவு கொண்ட இந்த மிகப்பெரிய குகை உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இதில் உள்ள மற்றுமொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்த குகைக்குள் மனிதர்கள் காலடித்தடம் பட்டதே இல்லையாம்!

உலகிலேயே மிகப்பெரிய குகைப்பாதை
சன் டூங் குகையின் மொத்த நீளம் கிட்டத்தட்ட 9 கிமீ நீளமாகும், இதன் உயரம் சில இடங்களில் 200 மீட்டர் ஆகவும், சில இடங்களில் 503 மீட்டர் வரை உயரமானதாகவும் இருக்கிறது. இது எவரெஸ்ட் சிகரத்தின் 8848 மீ ஏறி, 1000 மீ உயரம் கொண்ட ஒரு மேட்டைக் கண்டுபிடித்ததற்குச் சமம் என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மலேசியாவின் குகையை விட இந்து ஐந்து மடங்கு பெரியதாம்.

ஹாங் சன் டூங் பெயர் உருவாக காரணம்
பாரம்பரியமாக, குகையைக் கண்டுபிடித்தவர்கள் தான் அதற்குப் பெயரிடுவார்கள். எனவே, ஹோ கான் மற்றும் நிபுணர் குழு கலந்துரையாடி, குகையை சன் டூங் என்று அழைக்க முடிவு செய்தனர் (2 வார்த்தைகளின் கலவை: சன் என்றால் மலை, டூங் என்பது சிறுபான்மையினரான புரு வான் கியூ வாழும் பள்ளத்தாக்கின் பெயர், மேலும் வரும் துவாங் நதி, அல்லது சுண்ணாம்பு மலையில் உள்ள குகை, நிலத்தடி நதி பாயும் என்று பொருள்) எல்லாவற்றையும் சேர்த்து ஹாங் சன் டூங் என்று பெயர் இட்டனர்.

சன் டூங் – ஒளிந்திருக்கும் ஒரு அதிசயம்
சன் டூங்கைச் சிறப்புமிக்கதாகவும், அங்கீகரிக்கப்பட்டதாகவும், உலகத்தால் நன்கு அறியப்பட்டதாகவும் ஆக்குவது குகைக்குள்ளேயே மறைந்திருக்கும் தனித்துவமான நிலத்தடி உலகமாகும். இது பல சிக்கலான மற்றும் ராட்சத ஸ்டாலாக்டைட்டுகள், குகைக்குள் வளரும் பழங்கால மழைக்காடுகள், அதன் சொந்த சுற்றுச்சூழல், வானிலை அல்லது ஒரு மர்மமான நிலத்தடி நதி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவற்றை எல்லாம் படிக்கும் போதே ஆர்வமாக இருக்கிறது அல்லவா. குகையின் இறுதிவரை எந்த ஆய்வாளரும் சென்றது இல்லையாம்.

இந்தக் குகையில் மட்டுமே காணப்படும் சிறப்பம்சங்கள்
o அகலமான குகை பாதை - 40 அடுக்கு வானளாவிய கட்டிடம் இந்த பாதையில் எளிதில் பொருந்தக்கூடியது மற்றும் போயிங் 747 விமானம் பறக்கும் அளவுக்கு பெரியது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
o தூரத்தில் தென்படும் ஒளி - 1.5 கிமீ தொலைவில் தென்படும் ஒளியை நீங்கள் கண்டு வியக்கலாம். உலகின் மிக உயரமான 80 மீட்டர் உயரம் கொண்ட ஸ்டாலாக்மைட் இங்கு தான் அமைந்துள்ளது.
o நிலத்தடி நதி - En குகை மற்றும் Khe Ry குகை பகுதியில் இருந்து வரும் மிக நீளமான அழகிய நிலத்தடி நதியை நீங்கள் இங்கே காணலாம்.
o புதை படிவங்கள் - இந்த குகைக்குள் நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு படிமமாக்கப்பட்ட அழகிய பவளப்பாறைகளை நீங்கள் பார்க்க முடியும்.
o எங்குமே பார்க்க முடியாத காட்சி - வெயில் நாட்களில் பகல் வேலையில் குகைக்குள் விழும் மாபெரும் சூரியக் கதிர்கள் ஆழமாக குகைக்குள் விழுந்து பிரகாசிக்கிறது. வானத்திற்கு மேலே இருந்து வரும் ஒளிக்கற்றை மற்றும் நிலத்தடி நதியிலிருந்து வரும் மூடுபனி வேறு எங்கும் காண முடியாத ஒரு கம்பீரமான காட்சியை உருவாக்குகிறது.
o குகைக்குள் மழைக்காடுகள் - குகைக்குள் 200 மீ ஆழத்தில் வளரும் ஆதிகால காடு உள்ளது. பல வகையான ஃபெர்ன்கள், பிகோனியாக்கள் மற்றும் பெரிய மரங்கள் கூட பாதையில் வளரும் நல்ல நிலைமைகளை உருவாக்குகிறது.
o குகை முத்துக்கள் - கால்சைட் கார்பனேட்டைக் கொண்டுசெல்லும் கூரையிலிருந்து நீர் துளிகளால் உருவான சிறு சிறு முத்துக்கள் குகை முழுக்க சிதறி கிடப்பதை பார்ப்பதற்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது.
o மனிதர்கள் தீண்டாத பகுதி - எத்தனை முறை இந்த குகையை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தாலும், மனிதர்கள் காலடித்தடம் ஒன்றுக் கூட கண்டுபிடிக்க முடியவில்லையாம்.
o அரிய வகை உயிரினங்கள் - புதிய வகை மீன்கள், சிலந்திகள், தேள்கள், இறால்கள் மற்றும் சில வகைப் பூச்சிகளையும் நீங்கள் இங்கு காணலாம்.
o சிறிய நீர்வீழ்ச்சிகள், நிசப்தம், குகையினுள் இருக்கும் மூடுபனி, அழகிய அமைப்பு ஆகியவைநீங்கள் வேறு உலகில் இருப்பது போன்று தோன்ற வைக்கும்.

ஹாங் சன் குகைக்கு நாம் பயணிப்பது எப்படி?
Oxalis Adventure Tours என்ற நிறுவனத்தின் மூலமாகவே இந்த குகைக்கு நாம் பயணிக்க முடியும். ஒரு ஆண்டுக்கு 1000 பயணிகளை மட்டுமே குகையை சுற்றிப்பார்க்க அனுமதிக்கின்றனர். நன்கு பயிற்சி பெற்று நீச்சல் வீரர்கள் கைடாக நம்முடன் வருவார்கள். பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை இந்த குகையில் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த குகை கண்டுபிடிக்கப்பட்டவுடன் வியட்நாமில் சுற்றுலா செழிப்பாகி விட்டது. இந்த இயற்கை நீங்கள் எப்போது காணப் போகிறீர்கள்



Click it and Unblock the Notifications



