Search
  • Follow NativePlanet
Share
» » நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ரொம்பவும் பிடிச்ச 5 கோயில்கள் இவை தான்!

நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ரொம்பவும் பிடிச்ச 5 கோயில்கள் இவை தான்!

ஒரு படம் ஹிட் ஆனாலும் கூட இந்தியாவில் உள்ள நடிகர்கள் பாட்டு, நடனம், பார்ட்டி என கொண்டாடி தீர்த்து விடுகிறார்கள். ஆனால், அடிக்கடி மெகாஹிட் பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தாலும் கூட, இது போன்ற கொண்டாட்டங்களுக்கு இடமளிக்காமல், தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆன்மீகத்தில் நேரத்தை செலவு செய்கிறார் நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அந்த வகையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ரொம்பவும் பிடிச்ச, அவர் அடிக்கடி சென்று வரக் கூடிய இந்த 5 கோயில்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்! இந்த 5 ஸ்தலங்களுமே சும்மா இல்லங்க, மிகவும் சக்தி வாய்ந்த ஆன்மீக ஸ்தலங்களாகும்!

மகா அவதார் பாபாஜி குகை, உத்தரகாண்ட்

மகாவதார் பாபாஜி குகை இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கிய ஆன்மீக ஸ்தலமாகும். இந்த குகை உத்தரகண்ட் மாநிலத்தின் குமாவோன் பகுதியில் அல்மோரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த சின்ன குகை தான் கிரியா யோகாவின் பிறப்பிடமாகவும், யோகா குரு லஹிரி மஹாசயா மஹாவதார் பாபா ஜியிடமிருந்து நேரடியாக கிரியா யோகா போதனைகளைப் பெற்ற இடமாகவும் உள்ளது. மகா அவதார் பாபாஜியின் அருமையையும், புகழையும் உணர்ந்த பக்தர்களும், பல்வேறு குருக்களைப் பின்பற்றும் பல யாத்ரீகர்களும் மற்றும் கிரியா யோகிகளும் தினமும் இந்த குகைக்கு வருகை தருகின்றனர்.

தனக்கு உலகிலேயே மிகவும் பிடித்த இடம் இது தான் என சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்து கூறியுள்ளார், அதர் ஏற்றாற்போல் அவர் அடிக்கடி வருவதும் இங்கு தான். அவரின் சமீபத்திய திரைப்படமான ஜெயிலர் வெளியீட்டுக்கு பிறகும் கூட அவர் இங்கு வந்திருந்தார். அவரைப் போன்ற புகழும் பெருமையும் கொண்ட ஒரு நட்சத்திரம் கரடுமுரடான மலைகளைக் கடந்து செல்வது அசாதாரணமானது, அதுவும் இந்த வயதில்.

Sri ragavendra mantralayam Andhra

ஸ்ரீ ராகவேந்திர மந்த்ராலயம், ஆந்திரப்பிரதேசம்

மந்த்ராலயம் தென்னிந்தியாவில் உள்ள முக்கியமான யாத்திரை மையங்களில் ஒன்றாகும், ஏனெனில் இது பெரிய வைஷ்ணவ துறவி ஸ்ரீ ராகவேந்திரர் (1601-1671) ஜீவ சமாதி எடுத்த புனித ஸ்தலமாகும். ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியின் பிருந்தாவனத்தை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் மந்திராலயத்திற்கு வருகிறார்கள்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ராகவேந்திர சுவாமி மிகவும் பிடிக்கும் என்பது உலகம் அறிந்த விஷயம். அவருடைய 100ஆவது படமாக கூட அவர ராகவேந்திர சுவாமியின் வரலாற்றில் தான் நடித்து இருந்தார். அடிக்கடி சூப்பர்ஸ்டார் இந்த கோயிலுக்கு விஜயம் செய்வது ஒரு வழக்கமான விஷயம் தான்.

ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில், தமிழ்நாடு

தமிழகத்தில் உள்ள கோயில்களில் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு மிகவும் பீடித்த கோயில் என்றால் அது திருவண்ணமலை ஸ்ரீ அண்ணாமலையார் கோயில் தான். இவர் முன்பெல்லாம் அடிக்கடி இந்த கோயிலுக்கு வருகை தந்துள்ளார். இவரைப் பார்க்க ரசிகர்கள் திரளுவதால், நாளடைவில் இந்த கோயிலுக்கு அடிக்கடி செல்வதை குறைத்துக் கொண்டாராம்.

திரையுலகில் சூப்பர் ஸ்டாராக தொடர்ந்து வெற்றி பெற்றாலும், ஆன்மிகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவருக்கு மிகவும் பிடித்த கோயில்களில் இதுவும் ஒன்று. பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றான, முக்தி அடைய கூடிய புண்ணியத்தை தரும் திருத்தலமான ஸ்ரீ அண்ணாமலையார் கோயில் நாம் அனைவரும் கட்டாயம் செல்ல வேண்டிய கோயிலாகும்.

Kedarnath sivan temple

கேதார்நாத் சிவன் கோயில், உத்தரகாண்ட்

இந்தியாவின் மிகவும் போற்றப்படும் கோவில்களில் ஒன்றான கேதார்நாத் வலிமைமிக்க கர்வால் இமயமலையில் அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட, பழமையான கோயில் நேர்த்தியான கட்டிடக்கலை நம்மை வியக்க வைக்கிறது. ஒரு கூம்பு வடிவ பாறை அமைப்பு சிவபெருமானின் "சதாசிவ" வடிவத்தில் வணங்கப்படுகிறது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கேதார்நாத் கோவில், சார் தாம் யாத்திரை சுற்றுவட்டத்தின் ஒரு பகுதியாகும்.சூப்பர் ஸ்டார் அடிக்கடி செல்லும் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

badrinath temple

பத்ரிநாத் விஷ்ணு கோயில், உத்தரகாண்ட்

விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பத்ரிநாத் கோயில் இந்தியாவின் மிக முக்கியமான யாத்திரைத் தலங்களில் ஒன்றாகும். இது இந்துக்களால் மிகவும் மதிக்கப்படும் நான்கு புனித ஸ்தலங்களில் ஒன்றாகும். இந்த புனித தலத்தை அடைவதற்காக பக்தர்கள் வலிமையான இமயமலை வழியாக கடுமையான பயணத்தை மேற்கொள்கின்றனர். அப்படி கடுமையான பயணம் மேற்கொண்டு தான் சூப்பர்ஸ்டார் இந்த கோயிலுக்கு வருகிறார். நடிகர் ரஜினிகாந்த் மிகவும் விரும்பி செல்லும் கோயில்களில் இதுவும் ஒன்று.

தனது UAE பயணத்தை முடித்துக் கொண்டு நேராக கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களுக்கு சென்று வழிப்பட்ட பின்னர் அவர் தற்போது சென்னை திரும்பியுள்ளார்!

More News

    Read more about: interesting facts rajanikanth
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+