Search
  • Follow NativePlanet
Share
» »வெளிநாட்டினர் போல கிறிஸ்துமஸ் கொண்டாட வேண்டுமா? இந்த இடங்களுக்கு செல்லுங்கள்!

வெளிநாட்டினர் போல கிறிஸ்துமஸ் கொண்டாட வேண்டுமா? இந்த இடங்களுக்கு செல்லுங்கள்!

உலகெங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்ட துவங்கிவிட்டது. நகரங்கள், ஷாப்பிங் மால்கள், வீதிகள், பொழுதுபோக்கு அரங்கங்கள் என அனைத்து இடங்களும் வண்ண விளக்குகளாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நாமும் வீடுகளில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களை கிட்டத்தட்ட துவங்கிவிட்டோம் தானே! ஆனாலும் இந்த கிறிஸ்துமஸை நீங்கள் ஏன் வித்தியாசமாக வெளிநாடுகளில் கொண்டாடவது போல (white christmas) பனி படர்ந்த இடங்களில் கொண்டாடக் கூடாது? வித்தியாசாமாக இருப்பதோடு மிகவும் உற்சாகமாகவும் ஆனந்தமாகவும் இருக்குமே! ஆனால் அதற்காக நீங்கள் வெளி நாடுகளுக்கு தான் செல்ல வேண்டும் என்று அர்த்தம் இல்லை, இந்தியாவிற்கு உள்ளேயே உள்ள அழகான பனி மூடிய இடங்களில் உங்கள் கிறிஸ்துமஸை கொண்டாடி மகிழ்ந்திடுங்கள்!

குல்மார்க், ஜம்மு காஷ்மீர்

குல்மார்க், ஜம்மு காஷ்மீர்

பனிச்சறுக்கு மற்றும் பனியில் அரங்கேறும் சாகச நடவடிக்கைகளில் ஈடுபட இங்கு தான் வர வேண்டும். பனி, உற்சாகம் மற்றும் சாகசங்கள் நிறைந்த கிறிஸ்துமஸ் விடுமுறையை நீங்கள் தேடுகிறீர்களானால், குல்மார்க் உங்களுக்கான சரியான இடமாகும். பனிக்கட்டிகளில் ஸ்னோமேன் செய்து, கேம்ப்ஃபயரில் ஈடுபட்டு, கேக் வேட்டி கொண்டாடி குடும்பம் குழந்தைகளுடன் இந்த கிறிஸ்துமஸை கொண்டாடிடுங்கள்.

மணாலி, இமாச்சல பிரதேசம்

மணாலி, இமாச்சல பிரதேசம்

இந்திய மலைவாசஸ்தலங்களின் ராணி என்றழைக்கப்படும் மணாலி மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மணாலி குளிர் காலத்தில் வெள்ளை போர்வையால் மூடப்படும் அழகைக் காண மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. குடும்பத்தினருடன் மணாலியின் அழகிய அமைதியான வீதிகளில் நடந்து சென்று ஷாப்பிங் செய்து மகிழுங்கள்.

ஆலி, உத்தரகாண்ட்

ஆலி, உத்தரகாண்ட்

இந்த அழகான சுற்றுலாத் தலம் பெரும்பாலும் டிசம்பர் முதல் மார்ச் வரை பனிப்பொழிவைப் பெறுகிறது. நீங்கள் நீல வானத்தையும் மிருதுவான குளிர்கால காலையையும் தேடுகிறீர்களானால், இதுவே சிறந்த இடமாகும். மலையேறுதல் மற்றும் பனிச்சறுக்கு உட்பட பல பொழுதுபோக்குகளும் இங்கு உள்ளன.

 தவாங், அருணாச்சல பிரதேசம்

தவாங், அருணாச்சல பிரதேசம்

வடகிழக்கில் உள்ள மிக அழகிய இடங்களில் ஒன்றான தவாங், பனியை விரும்புவோருக்கு மற்றொரு புகலிடமாக இருக்கும். தவாங் செழுமையான கலாச்சாரம், கெலிடோஸ்கோபிக் கட்டிடக்கலை மற்றும் ஏராளமான இயற்கை அழகு ஆகியவற்றின் கலவையாகும். டிசம்பர் முதல் ஜனவரி இறுதி வரையிலான மாதங்கள் இங்கு பனியைக் காண சிறந்த மாதங்கள். இங்கு வந்து கிறிஸ்துமஸ் கொண்டாடி பாருங்களேன். அடுத்த முறையும் இங்கேயே வர துடிப்பீர்கள்.

லாச்சுங்-யும்தாங்-ஜீரோ பாயிண்ட், சிக்கிம்

லாச்சுங்-யும்தாங்-ஜீரோ பாயிண்ட், சிக்கிம்

லாச்சுங்கிலிருந்து ஜீரோ பாயிண்ட் வரையிலான இடைப்பட்ட தூரம் டிசம்பர் முதல் மார்ச் நடுப்பகுதி வரை பனியால் அலங்கரிக்கப்படுகிறது. யும்தாங் பள்ளத்தாக்கில் வருடத்தின் மற்ற மாதங்களில் சில சமயங்களில் மிக உயர்ந்த இடங்களில் பனிப்பொழிவு இருக்கும். பூஜ்ஜிய டிகிரி காலநிலையில் உங்களை சூடாக வைத்திருக்க, காபி பருகி, கேம்ப்ஃபையரில், உற்சாகமாக நடனமாடி கிறிஸ்துமஸை கொண்டாடிடுங்கள்.

 சிம்லா, இமாச்சல பிரதேசம்

சிம்லா, இமாச்சல பிரதேசம்

சிம்லா இந்தியாவின் மிகவும் பிரபலமான மலைவாசஸ்தலங்களில் ஒன்றாகும். பல திரைப்படங்களிலும் பாடல்களிலும் இதன் அழகினை நாம் கண்டு ரசித்திருப்போம். குறிப்பாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு பெயர் பெற்ற பட்டியலில் உள்ள சில இடங்களில் இதுவும் ஒன்றாகும். நள்ளிரவில் சிம்லா தேவாலயத்தில் நடைபெறும் மாஸில் கலந்துக் கொண்டு, கிறிஸ்துமஸை கொண்டாடுங்கள்.

லே, லடாக்

லே, லடாக்

இந்தியாவின் குளிர்ந்த பாலைவனமான லே டிசம்பர் மாதத்தில் அதிசய பூமியாக மாறுகிறது. நுப்ரா பள்ளத்தாக்கு, பாங்காங் த்சோ, ஷாம் பள்ளத்தாக்கு, லமாயுரு மற்றும் கார்கில் ஆகியவை உங்கள் பயணத்தின் போது நீங்கள் பார்க்கக்கூடிய சில இடங்களாகும். லடாக்கில் ஒரு நீண்ட பைக் பயணம், திறந்த வெளியில் முகாம், கேம்ப்ஃபையர் என உங்கள் கிறிஸ்துமஸ் பொழுதை கழிக்கலாம்.

கட்டாவோ, சிக்கிம்

கட்டாவோ, சிக்கிம்

கூட்ட நெரிசல் எதுவுமின்றி வெள்ளை கிறிஸ்துமஸை கொண்டாட நீங்கள் இங்கு தான் வர வேண்டும். மலைகளின் பிரமிக்க வைக்கும் காட்சியுடனும், நல்ல பனிப்பொழிவுகளுடனும், சமூக ஊடகங்களில் நீங்கள் கொண்டாட விரும்பும் அனைத்து கிறிஸ்துமஸ் கேண்டிட்களுக்கும் இந்த இடம் ஏற்றது. காங்டாக் மற்றும் லாச்சுங் போலல்லாமல், மக்கள் கூட்டம் இல்லாததால் இந்த இடம் மிகவும் அமைதியாக இருக்கின்றது.

More News

    Read more about: kashmir himachal uttarakhand
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+