இந்தியா ஒரு ஏழை நாடு, விவசாயம் மட்டுமே பிரதானம், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடிமக்கள் நிறைந்த நாடு என பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதுவல்ல உண்மை நிலைமை, இந்தியர்கள் பலர் விஞ்ஞானம், தொழில்நுட்பம், அறிவியல், கல்வி, மருத்துவம் என உலக நாடுகளுக்கு சவால் விடும் அளவிற்கு வளர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் உலகின் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 3 ஆவது இடம் பிடித்துள்ளது. இதில் ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரியா போன்ற வளர்ந்த நாடுகளை முந்தி விட்டது என்பது தான் கூடுதல் சிறப்பு!

ஃபோர்ப்ஸின் உலக கோடீஸ்வரர்களின் லிஸ்ட்
உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து பல செல்வந்தர்களைப் பற்றியும் அவர்களின் கதைகளைப் பற்றியும் நாம் கேள்விப்படுகிறோம். உலகிலேயே அதிக கோடீஸ்வரர்கள் வசிக்கும் நாடு எது தெரியுமா? ஃபோர்ப்ஸ் 2023 அதிக பணக்காரர்களைக் கொண்ட முதல் தரவரிசை நாடுகளின் பட்டியலைப் பகிர்ந்துள்ளது. ஃபோர்ப்ஸ் 2023 பட்டியலின்படி, உலகின் அனைத்துப் பகுதிகளிலும் கிட்டத்தட்ட 77 நாடுகளில் 2,640 பில்லியனர்கள் (கோடீஸ்வரர்கள்) வாழ்கின்றனர்.
3ஆவது இடத்தைப் பிடித்த இந்தியா
2023ஆம் ஆண்டுக்கான உலக பில்லியனர்கள் தரவரிசைப் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்டது. இந்தியா இந்த ஆண்டு விதிவிலக்காக சிறப்பாக செயல்பட்டு, பட்டியலில் சில சிறந்த சாதனைகளையும் படைத்துள்ளது. கடந்த ஆண்டு ஆண்டு, இந்தியாவில் 166 பணக்காரர்கள் தங்கள் பெயர்களை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையில் இடம் பெற்றிருந்தனர். கடந்த ஆண்டு 166 ஆக இருந்த இந்தியாவின் பணக்காரர்களின் எண்ணிக்கை 2023ல் 169 ஆக அதிகரித்துள்ளது. இதோடு மட்டுமல்லாமல் இந்தியா 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

சரியும் இந்திய பணக்காரர்களின் வளர்ச்சி
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 9வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவிலும் ஆசியாவிலும் மிகப் பெரிய பணக்காரராக அவர் பதவி வகித்தாலும், அவரது மொத்த சொத்து 8 சதவீதம் குறைந்துள்ளது. உண்மையில், இந்தப் பட்டியலில் உள்ள 169 பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு 10 சதவீதம் குறைந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில், மொத்த சொத்து மதிப்பு 750 பில்லியன் டாலராக இருந்தது, இந்த ஆண்டு அது 675 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.

உலக பணக்காரர்களின் லிஸ்ட்
1. 735 பில்லியனர்களுடன் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது
2. 495 பில்லியனர்களுடன் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.
3. 169 பில்லியனர்களுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
4. 126 பில்லியனர்களுடன் ஜெர்மனி நான்காவது இடத்தில் உள்ளது.
5. 105 பில்லியனர்களுடன் ரஷ்யா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
6. 71 பில்லியனர்களுடன் ஹாங்காங் ஆறாவது இடத்தில் உள்ளது.
7. 65 பில்லியனர்களுடன் பிரேசில் ஏழாவது இடத்தில் உள்ளது.
8. 64 பில்லியனர்களுடன் கனடா எட்டாவது இடத்தில் உள்ளது.
9. 56 பில்லியனர்களுடன் ஐக்கிய ராச்சியம் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
10. 51 பில்லியனர்களுடன் இத்தாலி ஆறாவது இடத்தில் உள்ளது.

எப்போதுமே ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா
மொத்தம் 724 தனிநபர்கள் சுமார் $4.4 டிரில்லியன் சொத்து மதிப்புடன், அதிக பில்லியனர்களைக் கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது. பில் கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க், ஜெஃப் பெசோஸ் மற்றும் எலோன் மஸ்க் போன்ற அமெரிக்க பணக்காரர்கள் தொழில்நுட்பத் துறையை அடிப்படையாகக் கொண்டவர்கள். அமெரிக்காவின் கோடீஸ்வரர்களின் கூட்டுச் சொத்து உலகின் பில்லியனர் செல்வத்தில் 25% க்கும் அதிகமாக உள்ளது, இது இந்த பகுதியில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.



Click it and Unblock the Notifications



