Search
  • Follow NativePlanet
Share
» »உங்கக்கிட்டே பாஸ்போர்ட் இருக்கா? அப்போ உடனே இந்த நாடுகளுக்கு எல்லாம் ட்ரிப் பிளான் பண்ணுங்க!

உங்கக்கிட்டே பாஸ்போர்ட் இருக்கா? அப்போ உடனே இந்த நாடுகளுக்கு எல்லாம் ட்ரிப் பிளான் பண்ணுங்க!

சுற்றுலா விரும்பிகள் எவருக்குமே வெளிநாடு சுற்றுலா என்பது மிகவும் பிடிக்கும். ஆனால் வெளிநாடுகளுக்கு செல்லும் அனைவர்க்கும் தடையாக இருப்பது விசா (அந்த நாடுகளை சுற்றிப் பார்ப்பதற்காக அவர்கள் நமக்கு வழங்கும் அனுமதி) தான்! சில நாடுகளுக்கு நாம் எத்தனை முறை விசா அப்ளை செய்தாலும் நமக்கு கிடைப்பதே இல்லை. ஆனால் மார்ச் 2023 நிலவரப்படியும், ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின்படியும் கிட்டத்தட்ட 60 நாடுகள் இந்தியர்களுக்கு விசா-ஆன்-அரைவல் வழங்குகிறது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று தான்! உங்கள் பாஸ்போர்ட், லக்கேஜ் எல்லாம் எடுத்துக்கிட்டு இந்த நாடுகளில் ஏதேனும் ஒன்றுக்கு சின்னதா ஒரு ட்ரிப் போயிட்டு வாங்க!

Thailand

வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் முக்கியப்பங்கு வகிக்கும் விசா

அந்த நாட்டு மண்ணில் நாம் கால் வைக்க அந்த நாட்டு அரசாங்கத்திற்கு ஆட்சேபனை எதுவும் இல்லை, விசாவில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களுக்கு நம்மால் அங்கு சுதந்திரமாக இருக்க முடியும் என்பதை உணர்த்துவதே விசா. விசா விண்ணப்ப செயல்முறையை உங்களுக்கு அலுத்துவிட்டது என்றால், கவலைப்பட வேண்டாம். இந்தியர்களுக்கு என விசா ஆன் அரைவல் கொடுக்க பல நாடுகள் உள்ளன. அவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து நீங்கள் உங்கள் விடுமுறையை கழிக்கலாம். மனதை மயக்கும் இந்த வெளிநாட்டு நிலங்கள் இந்தியர்களுக்கான சிறந்த விசா ஆன் அரைவல் கொடுப்பதால் நீங்கள் அடுத்த நொடியே கூட டிக்கெட் புக் செய்து இந்த நாடுகளுக்கு எல்லாம் பறக்கலாம்.

முதலிடத்தில் இருப்பது ஜப்பான்

ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின்படி, ஜப்பான் தான் உலகின் மிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டைக் கொண்டுள்ளது, அதாவது கிட்டத்தட்ட 150 க்கும் மேற்பட்ட நாடுகள் ஜப்பான் மக்களுக்கு விசா ஆன் அரைவல் வழங்குகிறது. அதே நேரத்தில் 60 நாடுகளுக்கு அணுகலுடன் இந்தியா இந்தப் பட்டியலில் 87 வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர், இந்த 60 நாடுகளில், எவற்றிற்கும் சென்றாலும் எந்த முன் விசாவும் தேவையில்லை. அங்கு சென்றே விசா வாங்கிக் கொள்ளலாம். ஆகவே அவர்களின் கனவு இடங்களுக்குச் செல்ல எந்தத் தடையும் இல்லை, அவர்கள் சுதந்திரமாக இந்த நாடுகளுக்கு எல்லாம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம்.

maldives

விலை மலிவான அழகான நாடுகள்

இந்த லிஸ்டில் உள்ள நாடுகளுக்கான விமான டிக்கெட் உங்களுக்கு காஸ்ட்லியாக இருப்பது போன்று தோன்றலாம். ஆனால் ஆனால் பறப்பதை விட சுற்றி வருவது மலிவானது. அதோடு மட்டுமல்லாமல் இந்த இடங்கள் எல்லாம் மிகவும் அழகானவை, உங்களுக்கு சிறந்த பயண அனுபவங்களை வழங்க தவறாது. ஆகவே, இந்த இடங்களுக்கு நீங்கள் ஏன் விடுமுறை எடுக்கக்கூடாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. ஆம், இந்த சர்வதேச இலக்குகளில் சில மிகவும் அருமையாக இருக்கின்றன, அவை ஒரு ஐபோன் வாங்குவதையும் விடவே குறைவாகவே செலவாகும். இப்போவே கீழே லிஸ்டில் உள்ள இடங்களில் எந்த இடத்திற்கு செல்லலாம் என உங்கள் பயணத்தைத் திட்டமிடத் தொடங்குங்கள்.

இந்தியர்களுக்கு விசா ஆன் அரைவல் வழங்கும் நாடுகள்

1 மாலத்தீவுகள்
2 தாய்லாந்து
3 மியான்மர்
4 இலங்கை
5 நேபாளம்
6 கம்போடியா
7 பூட்டான்
8 இந்தோனேசியா
9 லாவோஸ்
10 மொரிஷியஸ்
11 ஈரான்
12 பிஜி
13 மடகாஸ்கர்
14 ஜோர்டான்
15 மார்ஷல் தீவுகள்
16 செர்பியா
17 கத்தார்
18 நியு
19 பார்படாஸ்
20 ஓமன்
21 போட்ஸ்வானா
22 ஜமைக்கா
23 திமோர்-லெஸ்டே
24 மைக்ரோனேஷியா
25 சமோவா
26 பொலிவியா
27 அல்பேனியா
28 எல் சால்வடார்
29 பலாவ் தீவுகள்
30 டொமினிகா
31 புருண்டி
32 எத்தியோப்பியா
33 துவாலு
34 வனுவாடு
35 பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள்
36 கிரெனடா
37 மொன்செராட்
38 டிரினிடாட் மற்றும் டொபாகோ
39 செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ்
40 செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்
41 செயின்ட் லூசியா
42 ஹைட்டி
43 மக்காவோ
44 கேப் வெர்டே தீவுகள்
45 கொமோரோ தீவுகள்
46 காபோன்
47 கினியா-பிசாவ்
48 மொரிட்டானியா
49 மொசாம்பிக்
50 ருவாண்டா
51 செனகல்
52 சீஷெல்ஸ்
53 சியரா லியோன்
54 சோமாலியா
55 தான்சானியா
56 டோகோ
57 துனிசியா
58 உகாண்டா
59 ஜிம்பாப்வே
60 குக் தீவுகள்

இந்தப் பட்டியலில் உங்கள் பக்கெட் லிஸ்டில் இருக்கும் நாடு எது? நீங்கள் எப்போது செல்லப் போகிறீர்கள்?

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+