Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் இந்த நகரங்களில வாழ நிறைய சம்பாதிக்கணுமாம் – சென்னை கூட லிஸ்டில இருக்கு!

இந்தியாவின் இந்த நகரங்களில வாழ நிறைய சம்பாதிக்கணுமாம் – சென்னை கூட லிஸ்டில இருக்கு!

ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான நைட் ஃபிராங்க் இந்தியாவின் மிகவும் காஸ்ட்லியான (Costliest cities) பெருநகரங்களின் லிஸ்டை வெளியிட்டுள்ளது. சமமான மாதாந்திர தவணைகளின் விகிதம் (EMI) மற்றும் சராசரி குடும்பத்திற்கான வருமானத்தின் (Monthly Income) அடிப்படையில் இந்த நகரங்கள் யாவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன! இந்த பட்டியலில் நம் எல்லோரும் எதிர்பார்ப்பது போலவே மும்பை முதலிடத்தில் உள்ளது!

நைட் ஃபிராங்க் வெளியிட்ட இந்திய காஸ்ட்லியான நகரங்களின் லிஸ்ட்

மும்பை வாழ்வதற்கு மலிவானது இல்லை என்பது ஒவ்வொரு மும்பைவாசிக்கும் நன்கு தெரிந்த உண்மை தான். ஆனால் இப்போது, தரவு கூட அதை ஆதரிக்கிறது. நாட்டிலேயே மிகவும் விலையுயர்ந்த நகரமாக மும்பை இருப்பதாக சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. நாட்டின் முன்னணி சொத்து ஆலோசகர்களில் ஒன்றான நைட் ஃபிராங்க் Knight Frank Affordability Index என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை இந்திய நகரங்களை விலை உயர்ந்தது முதல் மலிவானது வரை வரிசைப்படுத்தியது. அந்த பட்டியலில் அகமதாபாத் மிகவும் மலிவான நகரமாக இடம் பிடித்துள்ளது.

1

50 சதவீதத்திற்கு மேல் தேவைப்பட்டால் அங்கு வாழ்வது கடினம்

வீட்டு வசதிக்கான மாதாந்திர தவணைகளில் குடும்பங்கள் செலவிடும் வருமானத்தின் விகிதத்தை இந்த அறிக்கை அளவிடுகிறது. அறிக்கையின் அளவுகோலின்படி, ஒரு நகரத்திற்கு ஒரு குடும்பத்தின் வருமானத்தில் 50 சதவீதத்திற்கு மேல் தேவை என்றால், அது கட்டுப்படியாகாததாகக் கருதப்படுகிறது.

மிகவும் காஸ்ட்லியான நகரங்களின் லிஸ்டில் முதலிடத்தில் மும்பை

மும்பையைப் பொறுத்தவரை, சராசரி குடும்பம் தனது வருமானத்தில் 55 சதவீதத்தை வீட்டு EMIகளுக்காகச் செலவிடுகிறது என்று அறிக்கை வெளிப்படுத்துகிறது. அதனால் தான் வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த நகரமாக மும்பை முதல் இடம் பெற்றுள்ளது.மும்பையைத் தொடர்ந்து ஹைதராபாத் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

2

இரண்டாம் இடத்தில் ஹைதராபாத்

ஹைதராபாத்தில் வசிக்கும் ஒரு குடும்பம் அதன் வருமானத்தில் சராசரியாக 31 சதவீதத்தை EMI களில் செலவிட வேண்டும். இது மும்பையை விட கணிசமாக குறைவாக இருந்தாலும், இந்த நகரத்திற்கு இது மிகவும் விலை உயர்ந்தது. பட்டியலில் அடுத்தது நாட்டின் தேசிய தலைநகரம் டெல்லி உள்ளது. நீங்கள் இந்த நகரத்தில் வசிக்கிறீர்கள் என்றால், உங்கள் வருமானத்தில் 30 சதவீதத்தை வீட்டுவசதிக்காக ஒதுக்க வேண்டியிருக்கும்.

டெல்லிக்கு அடுத்தப்படியாக சென்னையும் பெங்களூருவும்

டெல்லிக்கு அடுத்த இடத்தை இரண்டு நகரங்கள் பகிர்ந்து கொள்கின்றன. அவை கர்நாடகாவின் பெங்களூரு மற்றும் தமிழ்நாட்டின் சென்னை. அறிக்கையின்படி, இரண்டு நகரங்களும் மிகவும் மலிவு விலையில் உள்ளன. ஏனென்றால், இரண்டு நகரங்களும் உங்கள் வருமானத்தில் 28 சதவிகிதம் வரை EMI ஆகச் செலுத்த வேண்டும். மற்ற நகரங்களுடன் ஒப்பிடும் போது சென்னையும் பெங்களூருவும் நடுத்தர மக்கள் வசிக்கக்கூடிய அளவில் தான் இருக்கிறது.

3

இந்தியாவின் மலிவான நகரம் - அகமதாபாத்

அடுத்த இடத்தில் மகாராஷ்டிராவின் புனே உள்ளது, அங்கு உங்கள் வருமானத்தில் 26 சதவீதத்தை வீட்டுத் தவணைகளுக்குச் செலுத்த வேண்டியிருக்கும். உங்கள் வருமானத்தில் 23 சதவீதத்தை மட்டுமே வீட்டு வசதிக்காக செலவழித்த அகமதாபாத், நாட்டிலேயே மிகவும் மலிவு விலை நகரமாக மாறியுள்ளது.

அதிகரிக்கும் EMI மற்றும் வருமான விகிதங்கள்

கடந்த ஒரு வருடமாக, இந்த நகரங்களில் வாழ்வது விலை உயர்ந்ததாகிவிட்டது. இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு முதல் அதன் முக்கிய கடன் விகிதத்தை 250 அடிப்படை புள்ளிகளால் உயர்த்தியதால், மேற்கூறிய நகரங்களில் உள்ள இந்த EMI மற்றும் வருமான விகிதங்கள் சுமார் 1-2 சதவீத புள்ளிகள் உயர்ந்துள்ளன. இதன் மூலம் நகரங்கள் முழுவதும் EMI சுமை சராசரியாக 14.4% அதிகரித்துள்ளது.

4

இந்தியாவின் காஸ்ட்லியான நகரங்களின் லிஸ்ட்

1. மும்பை, மகாராஷ்டிரா

2. ஹைதராபாத், தெலுங்கானா

3. டெல்லி-என்.சி.ஆர்

4. பெங்களூரு, கர்நாடகா & சென்னை, தமிழ்நாடு

5. புனே, மகாராஷ்டிரா

6. அகமதாபாத், குஜராத்

நீங்கள் சென்னை காஸ்ட்லியான நகரம் என்று நினைக்கிறீர்களா?

More News

Read more about: travel guide
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+