ஓடி ஓடி சம்பாதித்து, சொத்து சேர்த்து வைத்தது எல்லாம் அந்த காலம், நன்றாக சம்பாதித்து நாலு இடங்களைச் சுற்றி பார்த்து வாழ்க்கையை அனுபவிப்பது இந்த காலம். சோர்ந்து கிடக்கும் ஆன்மாவிற்கு புத்துணர்ச்சி அளித்து, உயிரை மெருகேற்ற உதவும் பல அழகிய இயற்கை சுற்றுலாத் தலங்கள் இந்த உலகில் உண்டு. அப்படி இந்த வருடம் உலக சுற்றுலாப் பயணிகள் எல்லாம் படையெடுத்து சென்ற இடம் எது தெரியுமா?
முதலிடங்களில் ஆதிக்கம் செலுத்தும் தாய்லாந்து
அழகிய கடற்கரைகள், வெப்பமண்டல வானிலை, பசுமையான சமவெளிகள், மற்றும் நீலமான நீர் என ஓவியம் போல காட்சியளிக்கும் பல சுற்றுலாத் தலங்கள் உலகில் உண்டு. கம்மி பட்ஜெட்டில் அழகான கடற்கரைகள், பசுமையான சமவெளிகள், அரிய வனவிலங்குகள், பட்டையை கிளப்பும் பார்ட்டிகள், கிளப்புகள் என அனைத்து வயதினரையும் ஈர்க்கும் தாய்லாந்து இந்த பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. முதல் மூன்று இடங்களிலும் தாய்லாந்து சுற்றுலாத் தலங்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

பல தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சி
MoneyTransfers.com ஆல் நடத்தப்பட்ட ஆராய்ச்சி, உலகெங்கிலும் மிகவும் பிரபலமான இடங்களை முன்னிலைப்படுத்தி, பிரபலமான சுற்றுலா தலங்களின் உள்ளூர் மக்கள்தொகையுடன் பார்வையாளர்களின் எண்ணிக்கையை ஒப்பிடுகிறது. யூரோமானிட்டர் இன்டர்நேஷனல் நடத்திய ஆய்வில் இருந்து சர்வதேச வருகை பற்றிய தரவு, உலக மக்கள்தொகை மதிப்பாய்வில் இருந்து புள்ளிவிவரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒவ்வொரு நகரத்திலும் வசிக்கும் ஒரு நபருக்கு சுற்றுலாப் பயணிகளின் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையைக் கண்டறிந்தனர்.
சுற்றுலாப் பயணிகளால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள்
உலகம் முழுவதும் உள்ள பல நகரங்கள் சர்வதேச பார்வையாளர்களால் எவ்வளவு நிரம்பி வழிகின்றன என்பதை இந்தக் குறியீடு எடுத்துக்காட்டுகிறது. இந்த அளவிலான புகழ் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் உள்ளூர் மக்களைக் காட்டிலும் அதிகமான கூட்டம் மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பலராலும் விரும்பப்படும் தாய்லாந்து
தாய்லாந்தின் இயற்கை அழகு மற்றும் நன்கு வளர்ந்த சுற்றுலா மட்டுமின்றி, பணத்திற்கு சிறந்த மதிப்பை வழங்குவதால், பயணிகள் மத்தியில் பிரபலமான இடமாக தாய்லாந்து உள்ளது என்று பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து வெளிநாடு சுற்றுலா செல்லும் பயணங்களில் தாய்லாந்து முதலிடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதலிடத்தில் தாய்லாந்து நாட்டின் ஃபூகெட் தீவு
புதிய இடங்களை ஆராய்வதற்கும் பழைய விருப்பங்களை மீண்டும் பார்வையிடுவதற்கும் பயணிகள் ஆர்வத்துடன் சுற்றுலா சென்று வருகின்றனர். 2023 ஆம் ஆண்டிற்கான அதிகம் பார்வையிடப்பட்ட இடங்களின் பட்டியலில் வெண்ணிற மணல், நீல நிற தெளிவான நீர், ஸ்கூபா டைவிங், நீச்சல் உள்ளிட்ட நீர் விளையாட்டுகளுக்கு பிரபலமான தாய்லாந்து நாட்டின் அழகிய தீவான புக்கெட் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

உலகில் அதிகம் பார்வையிடப்பட்ட முதல் 10 சுற்றுலாத் தலங்கள்
1. ஃபூகெட், தாய்லாந்து
2. பட்டாயா, தாய்லாந்து
3. கிராபி, தாய்லாந்து
4. முக்லா, துருக்கி
5. ஹுர்காடா, துருக்கி
6. மக்காவ், சீனா
7. ஹெராக்லியன், கிரீஸ்
8. வெனிஸ், இத்தாலி
9. ரோட்ஸ், கிரீஸ்
10. மியாமி, அமெரிக்கா
வெகுஜன சுற்றுலா எவ்வாறு மிகவும் விரும்பப்படும் பல இடங்களை அழிக்கத் தொடங்குகிறது என்பதையும் இந்த குறியீடு எடுத்துக்காட்டுகிறது.



Click it and Unblock the Notifications



