Search
  • Follow NativePlanet
Share
» »விசா இல்லாமல் இந்தியர்கள் சுற்றுலா செல்ல ஏற்ற டாப் 10 நாடுகள்

விசா இல்லாமல் இந்தியர்கள் சுற்றுலா செல்ல ஏற்ற டாப் 10 நாடுகள்

ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு விசா அவசியம். இதில் என்ன காரணத்திற்காக நாம் அந்த நாட்டிற்கு செல்கிறோம், எத்தனை நாட்கள் தங்க வேண்டும் என்பது உள்ளிட்ட விபரங்களை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். ஆனால் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமலேயே தங்கள் நாட்டிற்கு வந்து செல்வதற்கு 60 க்கும் மேற்பட்ட வெளிநாடுகள் அனுமதி வழங்கி உள்ளன. சுற்றுலா, தொழில் உள்ளிட்ட பல காரணங்களுக்காக இந்தியர்கள் அவர்கள் நாட்டிற்கு வருவதற்கு இவைகள் அனுமதி வழங்கி உள்ளன. இந்தியாவிற்கு அருகில் உள்ள எந்தெந்த நாடுகளுக்கு சென்று வர விசா தேவையில்லை, எந்த நாட்டில் எத்தனை நாட்கள் வரை தங்கலாம் என்பதையும், இவற்றில் குறிப்பிட்ட 10 நாடுகள் பற்றியும் வாங்க தெரிந்து கொள்ளலாம்.

Top 10 Visa free countries to travel for Indians

1. பூட்டான்

விசா இல்லாமல் இந்தியர்கள் செல்லக்கூடிய நாடுகளில் ஒன்று பூட்டான். இந்தியாவிற்கு அண்டை நாடான பூட்டானில் மலைகள், பள்ளத்தாக்குகளின் அழகை நீங்கள் 14 நாட்கள் வரை விசா இல்லாமல் ரசிக்க முடியும். புத்த மத கலாச்சாரம், அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை வழங்குவதுடன் புகழ்பெற்ற பல அழகிய சுற்றுலா தலங்களைக் கொண்ட நாடு என்பதால் சுற்றுலா பயணிகள் பலரும் பூட்டான் செல்ல அதிகம் ஆர்வம் காட்டுவது உண்டு.

2. இந்தோனேசியா

உலகிலேயே மிகப்பெரிய தீவு கூட்டங்களால் சூழப்பட்ட ஒரு நாடு இந்தோனேசியா. சுமத்திரா, ஜாவா என 17,000 க்கும் அதிகமான தீவுகள் இந்தோனேசியாவை சுற்றி உள்ளன. அழகிய கடற்கரைகளுக்கு மிகவும் புகழ்பெற்ற இந்த நாட்டில் 30 நாட்கள் வரை விசா இல்லாமல் இந்தியர்களால் சுற்றிப் பார்க்க முடியும்.

Indonesia

3. தாய்லாந்து

பரபரப்பான நகரங்கள், அழகான கடற்கரைகள், சந்தைகள், கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்றுடன் இயற்கை அன்னையின் மடியில் ஓய்வெடுக்க விரும்பினால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் தாய்லாந்து தான். இந்த நாட்டில் 30 நாட்கள் வரை விசா இல்லாமல் இந்தியர்கள் ஜாலியாக ஊர் சுற்றிப் பார்க்க முடியும்.

4. நேபாளம்

இந்தியாவிற்கு அருகில் உள்ள நாடு. இயற்கை பிரியர்கள், சாகச பிரியர்கள் அதிகம் விரும்பி செல்லும் நாடு நேபாளம் தான். இமயமலையில் டிரெக்கிங், ஆன்மீகப் பயணம் செய்வது உங்களுக்கு அற்புதமான மகிழ்ச்சியை தரும்.மிகச் சிறிய நாடாக நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் அமைந்துள்ள பழமையான கோவில்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள்.

5. மொரிஷியஸ்

அழகான தூய்மையான நீர், வெள்ளை மணல் பரப்புடனான கடற்கரைகள் ஆகியவை மொரிஷியஸின் தனிச்சிறப்பாகும். இந்து மத நாடுகளில் ஒன்றான மொரிஷியஸில் 90 நாட்கள் வரை விசா இல்லாமல் இந்தியர்கள் தங்க முடியும். நீர் விளையாட்டுக்கள், சொகுசு விடுதிகள், தனித்துவமான கலாச்சாரம் ஆகியவற்றை ஒருங்கே பெற்ற நாடு மொரிஷியஸ்.

6. கென்யா

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள கென்யா நாட்டில் 90 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்கி சுற்றி பார்க்க முடியும். இங்கு உள்ள வன விலங்குகள் சரணாலயம் ஏராளமாக உள்ளன. காட்டுக்குள் வாழும் கனவு நினைவாக வேண்டுமானால் கென்யாவிற்கு சென்று வரலாம். மசாய் கலாசாரம் நிறைந்த கென்யாவில் பயணிப்பதே மறக்க முடியாத அனுபவம் ஆகும்.

7. இலங்கை

விசா இல்லாமல் இந்தியர்கள் பயணிக்க கூடிய நாடுகளில் மிக அருகில் அமைந்துள்ள நாடு இலங்கை தான். பழமையான கோவில்கள், அழகிய தேயிலை தோட்டங்கள், அழகான கடற்கரைகள் ஆகியவற்றால் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் நாடுகளில் இதுவும் ஒன்று. அமைதியாக ஓய்வெடுக்க ஏற்ற இடமான இலங்கையில் இந்தியர்கள் விசா இல்லாமல் 30 நாட்கள் வரை தங்கி, சுற்றிப் பார்க்கலாம்.

8. பிஜி

அழகான கடற்கரைகள், ருசியான உணவுகள், டைவிங், ஸ்நோர்கெல் ஆகிய பிஜியில் சுற்றுலா வருபவர்களை அதிகம் கவரும் விஷயங்களாகும். மாமனுகா தீவு இங்கு அவசியம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. விளையாட்டு பிரியங்களின் சொர்க்க பூமி என்றால் அது பிஜி தான். இங்கு இந்தியர்கள், 90 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்கலாம்.

9. மலேசியா

பரபரப்பான தெருக்கள், கலாச்சாரங்கள், அழகான இடங்கள், பெற்றோனாஸ் இரட்டைக் கோபுரங்கள், கெந்திங் மலை உள்ளிட்ட இடங்களில் மலேசியாவில் தனித்துவமான அனுபவத்தை தரக் கூடிய நாடுகளாக அமைந்துள்ளன. இங்கு இந்தியர்கள் 30 நாட்கள் வரை விசா இல்லாமல் ஜாலியாக தங்களின் டிரிப்பை என்ஜாய் பண்ண முடியும்.

10. டோமினிக்கா

கரீபியன் கடலில் அமைந்துள்ள டோமினிக்கா, மழைக்காடுகள், அழகான கடற்கரைகள் ஆகியவற்றிற்கு பெற பெற்ற நாடாகும். இங்கு ஏராமான நீர்வீழ்ச்சிகள், சுத்தமான நீர் கொண்ட கடற்கரைகள் ஆகியவை சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கக் கூடியவை. இந்தியர்கள் 180 நாட்கள் வரை விசா இல்லாமல் இங்கு சுற்ற முடியும்.

More News

    Read more about: visa
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+