Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் நீர் விளையாட்டுகளுக்கு பெயர் பெற்ற இடங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க

இந்தியாவில் நீர் விளையாட்டுகளுக்கு பெயர் பெற்ற இடங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க

ஊர் சுற்ற, மலை பயணம் மேற்கொள்ள, இயற்கை அழகை ரசிக்க, போட்டோ எடுத்து மகிழ, அருவிகளில் குளிக்க, படகு பயணம் செல்ல, கடற்கரை அழகை ரசிக்க, ஆன்மிக தலங்களுக்கு செல்ல, டிரக்கிங் செல்ல என சுற்றுலா செல்லும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பமான விஷயங்கள் இருக்கும். அதே போல் நீரில் மிதந்து விளையாடிய படியே, சாகசங்கள் செய்து விளையாடி மகிழ்வதற்கு சிலருக்கும் மிகவும் பிடிக்கும். அப்படி சாகச பிரியர்களில் நீங்களும் ஒருவர் என்றால் தவறாமல் செல்ல வேண்டிய நீர் விளையாட்டு சாகசங்களுக்கு பெயர் பெற்ற நகரங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

water sports

புகழ்பெற்ற நீர் விளையாட்டு சாகச நகரங்கள் :

ஸ்கூபா டைவிங்

அந்தமான், கோவா, புதுச்சேரிக்குப் போனால் நிச்சயம் இந்த ஸ்கூபா டைவிங் விளையாட்டில் ஈடுபட மறக்காதீர்கள். அரபிக் கடலில் உள்ள தீவுகளின் தொகுப்பான லட்சத்தீவுகளிலும் இது மிக பிரபலம். நீருக்கு அடியில் சென்று பவளப்பாறைகள், வண்ண மயமான கடல் வாழ் உயிரினங்களை கண்டு ரசித்தப்படி கடலுக்கு அடியில் பயணிக்கும் த்ரில்லிங் அனுபவங்களை பெற முடியும்.

ஸ்னோர்கெலிங்

அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் இது மிகவும் பிரபலம். ஸ்னோர்கெலிங் சொர்க்க பூமி என்றே இவற்றை சொல்லலாம். அழகான ஆழ் கடலில் விளையாடும் டீப் டைவிங் விளையாட்டு இது. தெளிவான நீர், துடிப்பான உயிரினங்கங்களை கொண்ட பகுதி இது. ஹேவ்லாக் தீவு மற்றும் போர்ட் பிளேரின் நீருக்கடியில் அழகிய பவளப்பாறைகள், வண்ணமயமான மீன்கள், கடல் ஆமைகளை காண்பது வேறு உலகிற்கு சென்ற அனுபவத்தை தரும்.

ஒயிட் வாட்டர் ராப்டிங்

ரிஷிகேஷ், மனாலி, சிக்கிமின் டீஸ்டா ஆற்றில் ஆற்றின் நீரோட்டத்தின் போக்குடன் இதுபோல விளையாடி மகிழலாம். ரிஷிகேசை இந்தியாவின் ஒயிட் வாட்டர் ராப்டிங்கின் தலைநகர் என்றே சொல்லலாம். பாய்ந்து வரும் கங்கை ஆற்றில் சாகசம் செய்யும் அனுபவமே தனி தான். புதிதாக நீர் விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கும் கூட ஏற்ற இடமாக இது கருதப்படுகிறது.

water sports

ஜெட் ஸ்கீயிங்

கோவா, மும்பை, சென்னை, கோகர்ணா ஆகிய இடங்கலில் இந்த ஜெட் ஸ்கீயிங் பிரபலமாக உள்ளது. மறக்காமல் விளையாடுங்கள். தண்ணீரில் பைக் ஓட்டுவது போன்ற இந்த பயணத்தில் சிறியது, இரண்டு பேர் செல்வது என பல ரகங்கள் உள்ளன.

பாரா செய்லிங்

கோவா, கேரளா, சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, மகாராஷ்டிராவில் இந்த பாரை செய்லிங் பிரபலமாக உள்ளது. கடலோரத்தில் பறந்தபடி கடல் அழகையும், கடற்கரை அழகையும் ஒரு சேர பருகலாம். பாராசூட்டில் பறந்து, கடலின் மேல் சரிக்கி செல்லும் அனுபவத்தை பெற முடியும்.

கயாகிங்

கேரளா, அந்தமான், ஐதராபாத், சிக்கிமின் ஆற்றுப் பகுதிகளில் படகில் சென்று சாகசம் செய்யலாம். இதில் ஒருவர் மட்டும் செல்வது, இரண்டு பேராக செல்வது என இரண்டு வகைகள் உண்டு. இதில் நாமே துடிப்பு போட்டு படகை இயக்க வேண்டும். பெடல் செய்து செல்லும் ரகமும் உண்டு. ஆறுகள், ஏரிகள், கடலில் இது போன்ற சாகச விளையாட்டுக்களை செய்ய முடியும்.

வின்ட்சர்பிங்

பாய்மரப் படகு விளையாட்டு இது. கோவா, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் இது விளையாட முடியும். கோவாவின் வாகேட்டர் பீச், கேண்டோலிம் பீச் ஆகியவற்றில் சீரான நீர் மற்றும் காற்று இருப்பதால் இவைகள் ஆரம்ப மற்றும் இடைநிலையாளர்களுக்கு ஏற்றதாக உள்ளது.

பனானா போட் ரைடு

கோவா, அலிபாக், சென்னையில் உள்ள ஜாலியான படகு விளையாட்டு இது. வாழைப்பழம் போன்ற வடிவத்தில் இருக்கும் படகு, ஸ்பீட் போட்டால் இழுத்துச் செல்லப்படும். இதில் பயணம் செய்வது ஜாலியாக இருப்பது போல் தோன்றினாலும், மிகவும் த்ரில்லிங்கான அனுபவத்தை வழங்கக் கூடியதாகும்.

சர்பிங்

கோவளம், வர்கலா, சென்னையில் பிரபலமாக உள்ள இந்த நீர்ச்சறுக்கு விளையாட்டை விளையாட மறக்காதீர்கள். இதை தனியாக மட்டும் தான் விளையாட முடியும். பார்த்தாலே பதற வைக்கும் ஒரு அனுபவமாக தான் இது இருக்கும். பல அடி உயரத்திற்கு சீறி பாய்ந்து, எழும்பி வரும் கடல் அலைகளின் மீது பயணம் செய்யும் ஒரு அனுபவமாகும்.

நீர் மூழ்கி நடை விளையாட்டு

அந்தமான் நிக்கோபார், கோவாவில் இந்த நீர் மூழ்கி நடை விளையாட்டை அனுபவிக்கலாம். கடலுக்கு அடியில் உள்ள உயிரினங்களைக் கண்டு மகிழ முடியும்.

More News

Read more about: water
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+