Search
  • Follow NativePlanet
Share
» »உலகில் இந்துக்கள் அதிகம் வாழும் மூன்று நாடுகள் இவைகள் தான்

உலகில் இந்துக்கள் அதிகம் வாழும் மூன்று நாடுகள் இவைகள் தான்

உலகில் இந்துமதம் என்பது இரண்டாவது மிகப்பெரிய பழமையான மதமாகவும், 1.2 பில்லியனுக்கும் அதிகமான மக்களால் பின்பற்றப்படும் மூன்றாவது பெரிய மதமாகவும் உள்ளது. இந்து மதத்தின் அடிப்படையான வேதங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள் போன்றவை ஆன்மீக, தத்துவ, மற்றும் வாழ்க்கை முறையைக் குறிக்கும் முக்கியமான நூல்களாக உள்ளன. உலகில் எந்தெந்த நாடுகளில் இந்து சமய மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்து கலாச்சாரம் பற்றிய அறிய இந்த நாடுகளுக்கு ஒரு விசிட் போய்விட்டு வாருங்கள்.

Top 3 Countries in World had largest Hindu population

1. இந்தியா

இந்துமதத்தின் பிறப்பிடம் கருதப்படும் இந்தியாவில் மொத்த மக்கள் தொகை 1.4 பில்லியன். இதில் இந்துக்கள் சுமார் 80% (1.1 பில்லியன்) பேர் இருப்பதாக புள்ளி விபர கணக்கு தெரிவிக்கிறது.

அதிகம் பின்பற்றப்படும் சமய வழிபாட்டு முறைகள்:

  • வைணவம் (விஷ்ணுவின் வழிபாடு)
  • சைவம் (சிவபெருமானின் வழிபாடு)
  • சக்தி வழிபாடு (பார்வதி, காளி, லட்சுமி, சரஸ்வதி)
  • ஸ்மார்த்தம் (நான்கு முக்கிய தெய்வங்களை ஒருங்கிணைக்கும் வழிபாடு)

பிரபலமான ஆன்மீக தலங்கள்:

காசி விஸ்வநாதர் கோயில் - சிவபெருமானின் முக்கிய ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று.
ராமேஸ்வரம் நாமநாத சுவாமி கோயில் - ஸ்ரீராமரால் வழிபடப்பட்ட கோவில்
திருப்பதி வெங்கடேஷ்வர சுவாமி கோயில் - உலகில் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்லும் புகழ் பெற்ற கோயில்.

சபரிமலை ஐயப்பன் கோயில் - கடுமையாக விரதம் இருந்து பக்தர்களால் வழிபடும் இடம்.

முக்கிய சிறப்பு அம்சங்கள்:

இந்தியாவில் லட்சக்கணக்கான முக்கிய இந்து கோயில்கள் உள்ளன. கும்பமேளா, தீபாவளி, நவராத்திரி போன்றவை மிகப்பெரிய பண்டிகைகளாக கொண்டாடப்படுகின்றன. இந்தியாவே இந்துமதத்தின் பூர்வீகம் என்றும், இதன் மரபுகள், ஆன்மீக வழிபாடுகள், மற்றும் கலாச்சாரம் உலகெங்கும் பரவியுள்ளன என்றும் சொல்லப்படுகிறது.

Pashupatinath Temple

2. நேபாளம்

சிவபெருமான் இன்றும் வசிப்பதாக சொல்லப்படும் புனித பூமி ஆகும். இதன் மொத்த மக்கள் தொகை 30 மில்லியன். இவர்களில் இந்துக்கள்: 81% (சுமார் 24 மில்லியன்) பேர் உள்ளதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன.

முக்கிய கோயில்கள்:

பசுபதிநாதர் கோயில் - சிவபெருமான் பிரதான தலங்களில் ஒன்று.
முக்திநாத் கோயில் - வைணவத் திருத்தலங்களில் ஒன்றாக விளங்கும்.
காளிகா தேவி கோயில் - சக்தி வழிபாட்டின் முக்கிய மையம்.

முக்கிய சிறப்பு அம்சங்கள்:

நேபாளம், ஒரு காலத்தில் உலகின் ஒரே ஹிந்து நாடாக இருந்தது (2008 வரை). இங்கு இந்துக்களின் பெரும் திருவிழாக்களான தசைன் (Dashain) மற்றும் திதார் (Tihar) மிகப் பிரபலமாக கொண்டாடப்படுகின்றன. ராணி வாசல் (Kumari Ghar) - இங்கு சிறு குழந்தைகள் தேவதையாக (குமாரி) வாழ்ந்து வழிபடப்படுகின்றனர். மொத்தம் 60% மேல் நபர்கள் சிவபெருமானை வழிபடுவார்கள். நேபாளம், இந்தியாவுக்குப் பிறகு உலகில் அதிக இந்துக்கள் வாழும் நாடு ஆகும். இதன் சைவ மரபுகள், அரிய கோயில்கள், ஆன்மீக பாரம்பரியம் மிகவும் வலுவாக உள்ளது.

Temple

3. வங்கதேசம் :

புகழ்பெற்ற இந்து பாரம்பரியத்தின் மண்ணான வங்கதேசத்தில் மொத்த மக்கள் தொகை 170 மில்லியன். இவர்களில் இந்துக்கள் 9% (சுமார் 15 மில்லியன்) பேர் வசிக்கிறார்கள்.

முக்கிய கோயில்கள்:

  • தக்கேஷ்வரி கோயில், தாக்கா - வங்கதேசத்தின் முக்கிய இந்து ஆலயம்.
  • ஸ்ரீ ஸ்ரீ லோகநாத் பிரம்மச்சாரி ஆசிரமம் - பக்தர்களின் அதிகம் கூடுமிடம்.
  • சிட்டகாங் சந்திகா கோயில் - சக்தி வழிபாட்டின் முக்கிய கோயில்.

முக்கிய சிறப்பு அம்சங்கள்:

வங்கதேசத்தில் துர்கா பூஜை, காளி பூஜை, ஜன்மாஷ்டமி போன்ற விழாக்கள் மிக பிரபலமானவை. சுந்தரபன்ஸ், இந்துக்களால் தக்ஷிணேஸ்வரி தேவி இருப்பிடமாக கருதப்படுகிறது. 1947 முதல் 1971 வரையிலான காலகட்டத்தில், பல்வேறு இந்துக்கள் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் குடிபெயர்ந்தனர்.
இன்று, வங்கதேசத்தில் அசாதாரண சூழல் எதிர்கொண்டபோதும், இந்துக்கள் தங்கள் மத மற்றும் கலாச்சார மரபுகளை கடைப்பிடிக்கின்றனர். வங்கதேசம், இந்தியாவை விட குறைவான இந்து மக்கள் தொகையை கொண்டிருந்தாலும் இங்கு இந்துமத பாரம்பரியங்கள், கோயில்கள், மற்றும் பண்டிகைகள் இன்னும் சிறப்பாக உள்ளன.

More News

    Read more about: temple nepal hindu temple
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+