இளமை காலத்திலேயே அனுபவிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். 30 வயதை நெருங்கும்போது உங்களுக்கு பொறுப்புகள் கூடியிருக்கும். நாளை என்ற ஒன்று இல்லவே இல்லை என கருதுங்கள். இன்றைய பொழுதை இன்றே அனுபவித்து மகிழுங்கள். நீங்கள் முப்பதை அடையும் முன்பாக இந்தியாவில் காணவேண்டிய 10 இடங்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

கோவாவில் கொண்டாட்டம்
20 முதல் 30 வயதுக்குள் கட்டாயம் கண்டுகளித்து அனுபவிக்க வேண்டிய பகுதிகளில் கோவா நிச்சயமாக முதல் 3 இடங்களைப் பிடித்துவிடும்.
கோவாவின் இரவுக்கொண்டாட்டங்கள், வகைவகையான மதுக்கள், கடற்கரை சுற்றுலா என அத்தனை மறக்கமுடியாத நினைவலைகளை உருவாக்கவல்லது இந்த கோவா.
PC: Shakti Shiva

மெக்லியோட்கஞ்ச் மலையேற்றம்
அதிஅற்புதமான மலைகள் சுற்றுலாப் பயணிகளுக்கு பசுமை நிறைந்த வண்ண இயற்கையை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும்.
இரவு நேரங்களில் கூடாரம் அமைத்து மின்னும் நட்சத்திரங்களை கண்டுகொண்டே நண்பர்களுடன் பொழுதை கழிப்பது நல்ல அனுபவமாகும்.
PC: Sandesh

ஸ்ரீநகரின் ரம்மியங்கள்
நீங்கள் 20 களில் இருந்தால், உங்கள் சுற்றுலாப் பட்டியலில் இடம்பிடிக்கவேண்டிய மற்றொரு பகுதி காஷ்மீரின் ஸ்ரீநகர்.
பூமியில் சொர்க்கம் இருப்பதாகச் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா. ஆம் ஸ்ரீநகர் தான் அந்த சொர்க்கம்.
PC: Mehraj Mir

அந்தமானில் ஸ்கூபா டைவிங்
தண்ணீர் என்றால் பயமா.. நீச்சல் தெரியாதா அப்படியென்றால் பயத்தை தூர விரட்டி, ஆழ் கடலுக்குள் சென்று இயற்கையின் கொடைகளை கண்டு களிக்கும் நேரம் வந்துவிட்டது.
நம்புங்கள்... ஒரு முறை நீங்கள் அந்தமான் சென்றுவிட்டால், மீண்டும் மீண்டும் வரத்தூண்டும் அழகிய கடற்கரை.
PC: Similan-Diving-Safaris

லடாக்கில் நட்சத்திரக் குளியல்
சுற்றுலாப் பிரியர்கள் ஒவ்வொருவரும் தங்களது கனவு பயணம் என்று கருதும் இடங்களைப் பட்டியலிடுவர். அதன்படி முதல் 10 இடங்களுள் ஒன்றாக நிச்சயமாக இந்த லடாக் இருக்கும்.
ஏனென்றால், இந்த இடம் அவ்வளவு அழகாக, நட்சத்திரங்களின் நடுவில் இருப்பதுபோன்ற தோற்றத்தைத் தரும்.
PC: Waldemar Halka

வாராணசி
இந்த பட்டியலில் எப்படி காசி வந்தது என்று நீங்கள் நினைக்கலாம்.. ஆனால் நீங்கள் 30 ஐ எட்டுவதற்குள் பாக்கவேண்டிய இடங்களுள் வாராணசியின் ஆரத்தி திருவிழா, படகு சவாரி முதலியன இருக்கின்றன.
PC: Enn.Li

மும்பையில் இரவு விருந்து
தூங்கா நகரம் மும்பையில் இரவில் தனியாக அல்லது நண்பர்களுடன் கடற்கரையோர சாலைகளில் சுற்றித்திரிவது பலருக்கு ஆனந்தத்தை தரவல்லது.
இரவு விருந்துகள், டிஸ்கோத்தே, சிற்றுண்டிகள் என மும்பை 20 முதல் 30 வயதுக்குள் கட்டாயம் காணவேண்டியது.
PC: RichardDavidZ

அல்மோரா காடுகள்
காட்டுப்பாதையில் பயணித்தல் என்பது பலருக்கு பிடித்தமான விசயம். அமைதியான காடுகள், உயரமான மரங்கள் கொண்ட தனிமையான பொழுதுகள் பலருக்கும் நீங்காத நினைவுகளைத் தரும்.
PC: Feroze

தென்னகத்தின் ஸ்காட்லாந்து குடகு மலைக்கு பயணம்
நீங்கள் 30 ஐ அடையும் முன்பாக காணவேண்டிய மற்றொரு இடம் இந்த கூர்க். பெங்களூருவிலிருந்து விரைவில் செல்லக்கூடிய வகையில் அமைந்துள்ள இடம்.
மனம் மகிழ நாள் முழுவதும் சுற்றிப் பார்க்கலாம் இந்த கூர்க் காடுகளை...
PC: Jeswanth

கொல்கத்தாவில் துர்கா பூஜை
துர்கா பூஜையின் போதுதான் கொல்கத்தாவின் அனைத்து மக்களும் விழாக்கோலம் கொண்டு நகரத்தையே அதிர வைப்பர்.
வங்காளத்தின் கலாச்சாரங்களை இந்த பண்டிகையின் போது நாம் காணலாம். வண்ண வண்ண கோலமிட்டு துர்கையை வழிபடும் திருவிழாவின் போது கொல்கத்தாவில் நாம் இருந்தால்
அடையும் மகிழ்ச்சியே வேறு...
PC: Shubhadip Ghosh



Click it and Unblock the Notifications




