Search
  • Follow NativePlanet
Share
» »சைவக் கடவுளின் பூமி... 12 ஜோதிர்லிங்கமும் ஒரு இடத்தில் தரிசனம்..!

சைவக் கடவுளின் பூமி... 12 ஜோதிர்லிங்கமும் ஒரு இடத்தில் தரிசனம்..!

சமவெளி, வளமைத் ததும்பிய புல் தழையுடன் செழிப்பான நிலங்களை கொண்ட கைமூரில் உள்ள 12 ஜோதிர்லிங்கத்தையும், சிவனே குடியிருக்கும் தலத்தையும் தேடிப் போகலாம் வாங்க.

கோவில்கள், கோட்டைகள், மலைகள், காடு, அருவிகள் மற்றும் இயற்கை காட்சிகள் என அனைத்துத் தரப்பு மக்களையும் தன் வசம் ஈர்ப்பதில் சிறந்தது கைமூர். இறைவனால் கைமூர் சுற்றுலா பன்முகங்களை கொண்டதாக ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக வரையறுக்கப்படுகிறத. போற்றத்தக்க பாரம்பரிய இடங்களை கொண்ட கைமூர், பீகாரின் அதிர வைக்கும் வட்டாரத்தில் ஒன்றாகும். பீகாரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கைமூர் ஒரு நிர்வாகம் சார்ந்த மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் முதன்மை தலைமையகம் பபுவாவில் உள்ளது. இங்கு காணப்படும் சமவெளி, வளமைத் ததும்பிய புல் தழையுடன் செழிப்பான நிலங்களை கொண்டதாகும். இத்தகைய கைமூரில் உள்ள 12 ஜோதிர்லிங்கத்தையும், சிவனே குடியிருக்கும் தலத்தையும் தேடிப் போகலாம் வாங்க.

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?


வருடந்தோரும் கைமூர் நோக்கி ஆன்மீக பக்தர்கள் படையெடுக்கக் காரணமாக உள்ளது இங்குள்ள பைத்யநாத் என்னும் பகுதியே. பைத்யநாத்தில் ஒரு புகழ் பெற்ற சிவன் கோவில் உள்ளது. இதனை அக்காலத்து ப்ரத்திஹர் ராஜாங்கத்தை ஆண்டவர்கள் கட்டினார்கள். இங்கு பல பழங்காலத்து நாணயங்களும் பொருட்களும் பூமிக்கு அடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டதால் இது ஒரு தொல்பொருள் ஆராய்ச்சி இடமாகவும் விளங்குகிறது.

Ravishekharojha

கடவுளின் பூமி

கடவுளின் பூமி


சைவ பக்தர்களுக்கு முக்கியமான பகுதியாக உள்ளது பைத்யநாத். யமுனாஜோர் மற்றும் தருவா ஆகிய நதிகள் இப்பகுதியின் வழியே ஓடுகிறது. இயற்கை அழகும், ரம்மியமான வானிலையும் இப்பகுதியை புகர்பெற்ற சுற்றுலாத் தலமாக மாற்றியுள்ளது.

Nandanupadhyay

சிவனை மகிழ்வித்த ராவணன்

சிவனை மகிழ்வித்த ராவணன்


புராண வரலாற்றின் படி ராவணனின் வேண்டுதலில் மகிழ்ந்த சிவன் அவருக்கு ஒரு லிங்கத்தை பரிசளித்ததாகக் கூறப்படுகிறது. எதிரி அரசுக்கு அந்த லிங்கம் போவதை விரும்பாத மற்ற கடவுள்கள் விஷ்ணுவிடம் வேண்ட, அதன்படி விஷ்ணு வேடமிட்டு ராவணனை அந்த லிங்கத்தை தவறவிட வைத்தாரம். அந்த லிங்கமே தியோகரின் பிரதிஷ்டை செய்யப்படுவதாக நம்பப்படுகிறது.

Nandanupadhyay

பைத்யநாத் கோவில்

பைத்யநாத் கோவில்


1596-ல் உருவாக்கப்பட்ட இந்தக் கோவிலின் லிங்கம் பைஜூ என்பவரால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு பைத்யநாத் கோவில் என வழங்கப்பட்டது. நெளலாகா கோவிலும் அருகிலேயே அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ஷ்ராவண மாதத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு 30 நாள் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக குவிவது வழக்கம்.

Ravishekharojha

நந்தன் பஜார்

நந்தன் பஜார்


தியோஹரின் மேற்கு எல்லையிலுள்ள இந்த மலை புகழ்பெற்ற சுற்றுலாதளமாகும். இங்கேயே ஒரு சிவன் கோவிலும், நந்தி கோவிலும் ஒரு சிறுவர் பூங்காவும் உள்ளன. பேய்வீடு, கண்ணாடி வீடு என பலவகையான விளையாட்டுக்கள் இங்கே உள்ளன. படகு மற்றும் ரஷ்ய ஊஞ்சல் விளையாட்டுக்கள் மேலும் சிறப்பு சேர்க்கின்றன.

Arhamaleem

த்ரிகுத்

த்ரிகுத்

த்ரிகுடாசல் கோவிலுக்கு புகழ்பெற்ற இந்த மலை தியோகரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 2470 அடி உயரத்தில் உள்ள இந்த சிவன் கோவில் மயுராக்‌ஷி நதிவாயிலில் உள்ளது. மூன்று பிரதான உச்சிகள் இந்த மலைக்கு உள்ளதால் த்ரிகுத் என அழைக்கப்படுகிறது, மலைகளுக்கு மத்தியில் சம்பாதானந்தா தேவ் என்பவரால் உருவாக்கப்பட்ட திருகுடாசல் ஆசிரமம் ஒன்று உள்ளது. தற்சமயம் அவரது சீடர்களால் நடத்தப்படும் அந்த ஆசிரமத்தில் த்ரிஷூலி அம்மனின் கோவில் ஒன்றும் உள்ளது. ஜார்கண்டின் முதல் கயிற்றுவழியும் இங்கே அமைந்துள்ளது.

Bihar Images

நவ்லேகா கோவில்

நவ்லேகா கோவில்


ராதா கிரிஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்தக் கோவில், பாலானந்த் பிரம்மாச்சாரியின் சீடரான ராணி சாருஷீலாவால் கட்டப்பட்டது. தியோகருக்கு வெளியே உள்ள இந்தக் கோவிலில் இருந்து 1.5கிமீ தொலைவில் பைத்யநாத் கோவில் உள்ளது. பெலூரில் உள்ள ராமகிருஷ்ணா கோவிலைப் போலவே அமைந்துள்ள இந்த கோவிலைக் கட்ட ஒன்பது லட்ச ரூபாய் செலவிடப்பட்டதால் நவலேகா கோவில் என்றழைக்கப்படுகிறது.

Shivsh0336

சிவகங்கா

சிவகங்கா


இந்தக் குளத்தின் நீர் புனிதமானதாகவும், பல நோய்களைத் தீர்ப்பதாகவும் கருதப்படுகிறது. பைத்யநாத் கோவிலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள இந்தக் குளத்தில் நீராட ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். அருகிலேயே சிறிய சிவன்கோவில் ஒன்றும் உள்ளது. இந்து புராணத்தின்படி இந்தக் குளத்தை கையால் பூமியில் அடித்து சிவன் உருவாக்கியதாக கூறப்படுகிறது. இலங்கைக்கு செல்லும் வழியில் சிறுநீர் கழித்துவிட்டு கைகழுவ நீர்தேடிய போது நீர் கிடைக்காததால் இங்கு குளத்தை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.

Krantmlverma

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+