Search
  • Follow NativePlanet
Share
» »வேடந்தாங்கல் - சிறகுகளின் சங்கீதம் கேட்போம் வாருங்கள்

வேடந்தாங்கல் - சிறகுகளின் சங்கீதம் கேட்போம் வாருங்கள்

நாட்டுக்கு நாடு எல்லை வகுத்துக் கொண்டு, அண்டை நாட்டினர் மீது பகை கொண்டு மனிதன் போர் தொடுத்துக் கொண்டிருக்கும் இதே வேலையில் இந்த பிரிவு பாகுபாடுகள் ஏதும் இன்றி தங்கள் சிறகுகளில் சமாதானம் ஏந்தி பறந்து கொண்டிருக்கும் பறவைகளிடம் நாம் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது.

அப்படி பல்வேறு நாடுகளில் இருந்தும் பறவைகள் வந்து கூடும் ஓரிடமாக திகழ்கிறது காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருக்கும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். இயற்கையை நேசிக்கும் அனைவரும் கண்டிப்பாக செல்லவேண்டிய இவ்விடத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Goibibo தளத்திற்கான இலவச கூப்பன்கள் எல்லாவற்றையும் இங்கே இலவசமாக பெற்றிடுங்கள்

வேடந்தாங்கல்!!

வேடந்தாங்கல்!!

இந்த சரணாலயத்திற்கு மொத்தம் 40,000 பறவைகள், அதில் 26 மிகவும் அறிய வகையை சார்ந்தவை, நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வருடம் முழுக்க வருகின்றன. இன்றைக்கு வானத்தில் காகங்களையும், குருவிகளையும் பார்ப்பதே அரிதாகி வரும் போது குழந்தைகளுடன் இந்த சரணாலயத்திற்கு செல்லும் போது அவர்கள் நிச்சயம் குதூகலம் அடைவார்கள்.

Photo:Sudharsun Jayaraj

வேடந்தாங்கல்!!

வேடந்தாங்கல்!!

வேடந்தாங்கலில் உள்ள ஏராளமான சிறு குளங்களும், முட்டையிடுவதற்கு ஏற்ற தட்பவெட்பம் நிலவுவதுமே இங்கு பறவைகள் ஏராளமாக வர காரணமாக கூறுகின்றனர் பறவையியல் விஞ்ஞானிகள். ஆனால் எங்கோ ஆயிரம் மைல் தொலைவில் உள்ள பறவை ஒன்றுக்கு நம்ம ஊரில் இருக்கும் வேடந்தாங்கலை பற்றி எப்படி தெரியும் என்பது விளக்க முடியாத புதிர்.

Photo:Amit Kumar

வேடந்தாங்கல்!!

வேடந்தாங்கல்!!

உலகின் மிகப்பழமையான பறவைகள் சரணாலயமாகவும் இந்த வேடந்தாங்கல் திகழ்கிறது. 1798ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சரணாலயம் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக பறவைகளின் தேனிலவு ஸ்தலமாக இருக்கிறது. இந்த சரணாலயத்திற்காக இதனை சுற்றியுள்ள கிராம மக்களின் பங்கும் அளப்பரியது.

வேடந்தாங்கல்!!

வேடந்தாங்கல்!!

வேடந்தாங்கலை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் இங்கு வரும் பறவைகளுக்கு இடையுறாக இருக்கும் என்பதாலேயே தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதில்லை, அதே போன்று காற்று மாசுபடும் என்பதால் பொங்கலுக்கு முதல் நாள் கொண்டாடப்படும் போகி பண்டிகையன்று பழைய பொருட்கள் எதனையும் எரிப்பதும் இல்லை.

வேடந்தாங்கல்!!

வேடந்தாங்கல்!!

அக்டோபர் மாத மத்தியில் வேடந்தாங்கல் வரத் தொடங்கும் பறவைகள் ஏப்ரல் இறுதியில் தான் தங்களின் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்கின்றன. குறிப்பாக ஜனவரி மாதத்தின் போது 40,000 முதல் 50,000 பறவைகள் இந்த சரணாலயத்திற்கு வருகின்றன.

திருநெல்வேலி அருகில் உள்ள கூந்தங்குளம் சரணாலயத்தை விட வேடந்தாங்கல் பரப்பளவில் சிறியது என்றாலும் கூந்தங்குளத்தை காட்டிலும் வேடந்தாங்கலுக்கே அதிக எண்ணிக்கையிலான பறவைகள் வருகின்றன.

வேடந்தாங்கல்!!

வேடந்தாங்கல்!!

இங்கு உலகின் மூலை முடுக்கில் இருந்தெல்லாம் வகைவகையான பறவைகள் இங்கே வந்தாலும் இங்கு சுற்றுலா வருபவர்களால் மிகவும் விரும்பப்படும் பறவையாக இருப்பது 'பூ நாரை' என்றழைக்கப்படும் பிளமிங்கோ பறவைகள் தான்.

வேடந்தாங்கல்!!

வேடந்தாங்கல்!!

அதேபோல 'அன்றில்' பறவை என்றும் 'அரிவாள் மூக்கன்' என்றும் அறியப்படும் பறவையினம் நீண்ட மூக்குடன் வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இதுதவிர ஊசிவால் வாத்து, நீர்க் கோழி, புள்ளி மூக்கு வாத்து, மீன் கொத்தி, கொண்டலாத்தி (அ) மண் கொத்தி, மரங்கொத்தி, ஆள்காட்டி,கருஞ்சிட்டு, கருப்பு வெள்ளை சிட்டு, கதிர்க் குருவி, வால் காக்கை, சின்னான், குயில், குக்குறுவான், சாம்பல் நாரை, குருட்டுக் கொக்கு, இராக் கொக்கு ஆகிய பறவைகளையும் இங்கு காண முடியும்.

Photo:Shravantamaskar

புலம்பெயர் மற்றும் உள்நாட்டு பறவைகள் :

புலம்பெயர் மற்றும் உள்நாட்டு பறவைகள் :

வேடந்தாங்கலுக்கு வரும் புலம்பெயர் பறவைகளாக கிளுவை, ஊசிவால் வாத்து, நீலச்சிறகி வாத்து, தட்டவாயன் எனப்படும் ஷோவெல்லர், பச்சைக்காலி, பவளக்காலி, பட்டாணி உள்ளான் எனப்படும் உப்புக்கொத்தி போன்றவை அறியப்படுகின்றன.

புலம்பெயர் மற்றும் உள்நாட்டு பறவைகள் :

புலம்பெயர் மற்றும் உள்நாட்டு பறவைகள் :

அதேபோல உண்ணிக்கொக்கு, சிறுவெண் கொக்கு, சிறிய நீர்க்காகம், கூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை பாம்புத்தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், குருட்டுக்கொக்கு எனப்படும் மடையான் நத்தைகுத்தி நாரை, முக்குளிப்பான், கொண்டை நீர்க்காகம், வக்கா உள்ளிட்ட பறவைகள் இந்திய பறவை வகைகளாகும்.

புலம்பெயர் மற்றும் உள்நாட்டு பறவைகள் :

புலம்பெயர் மற்றும் உள்நாட்டு பறவைகள் :

இங்கு வரும் பறவைகளினால் வேடந்தாங்கலை சுற்றியுள்ள பகுதிகளில் விவாசாயம் பெருகியுள்ளதாம். எப்படி என கேட்கிறீர்களா? வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகளின் எச்சங்கள் வேடந்தாங்கல் ஏரியில் கலப்பதால் அவை செறிவுள்ளதாக மாறி விவசாய நிலங்களுக்கு பாயும் போது பயிர்கள் நன்கு வளர உதவி செய்கிறதாம். இதனாலேயே இந்த பறவைகள் மீள் கிராம மக்களுக்கு தனி பாசம்.

புலம்பெயர் மற்றும் உள்நாட்டு பறவைகள் :

புலம்பெயர் மற்றும் உள்நாட்டு பறவைகள் :

வேடந்தாங்கல் சரணாலயத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள் நெடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. இதில் பல்வேறு வகையான மரங்களும் அடங்கும் என்றாலும் நீர்க்கருவை, சமுத்திரப் பாலை போன்ற மரங்களில் பறவைகள் அதிகமாக வசிக்கின்றன. அதே போன்ற இங்குள்ள ஏரியில் பறவைகளின் உணவுக்காக அதிக அளவில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன.

புலம்பெயர் மற்றும் உள்நாட்டு பறவைகள் :

புலம்பெயர் மற்றும் உள்நாட்டு பறவைகள் :

புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் உடையவராக இருந்தால் உங்களுக்கு இதை விட சிறந்த இடம் இருக்க முடியாது. அதிகாலை நேரத்திலும் இறை தேடி முடித்து தங்கள் கூட்டுக்கு திரும்பும் மாலை நேரத்திலும் அற்புதமான காட்சிகளை குவியத்தின் உதவியுடன் சிறை பிடிக்கலாம்.

Photo:Thangaraj Kumaravel

எப்படி அடைவது?

எப்படி அடைவது?

சென்னையிலிருந்து 78 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் வேடந்தாங்கல் சரணாலயத்தை சாலை மூலமாக அடைய NH45 மூலம் பயணிக்க வேண்டும். அதோடு சென்னையிலிருந்து வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு குளிர்சாதன மற்றும் சாதாரண பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கு கட்டணமாக 100 முதல் 300 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மஹாபலிபுரம் போன்ற இடங்களிலிருந்தும் பேருந்து மூலமாக சுலபமாக வேடந்தாங்கல் சரணாலயத்தை அடைந்து விட முடியும்.

வேடந்தாங்கல்

வேடந்தாங்கல்

வேடந்தாங்கலுக்கு வரும் பல்வகை பறவைகள்.

வேடந்தாங்கல்!!

வேடந்தாங்கல்!!

வேடந்தாங்கலுக்கு வரும் பல்வகை பறவைகள்.

Photo:Balaji.B ( 2 Million Views)

வேடந்தாங்கல்!!

வேடந்தாங்கல்!!

வேடந்தாங்கலுக்கு வரும் பல்வகை பறவைகள்.

Photo:cprogrammer

வேடந்தாங்கல்!!

வேடந்தாங்கல்!!

வேடந்தாங்கலுக்கு வரும் பல்வகை பறவைகள்.

Photo:Lip Kee

வேடந்தாங்கல்!!

வேடந்தாங்கல்!!

வேடந்தாங்கலுக்கு வரும் பல்வகை பறவைகள்.

Photo:Lip Kee

வேடந்தாங்கல்!!

வேடந்தாங்கல்!!

வேடந்தாங்கலுக்கு வரும் பல்வகை பறவைகள்.

Photo:Lip Kee

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+