Search
  • Follow NativePlanet
Share
» »Sri Lanka Whale Watching கடல் அழகை ரசித்தவாறே மிகப்பெரிய பாலூட்டியை பார்க்கலாம்?

Sri Lanka Whale Watching கடல் அழகை ரசித்தவாறே மிகப்பெரிய பாலூட்டியை பார்க்கலாம்?

பூமியில், நிலப்பகுதி 30 சதவீதம். மீதமுள்ள 70 சதவீதம் நீர்பரப்பு தான். இயற்கை அளித்த அருட்கொடைகளில் ஒன்று கடல். இந்த உப்பு நீரை சார்ந்து, ஆயிரக்கணக்கான உயிரினங்கள் வாழுகின்றன.

இவற்றில், எப்போதும் சிரிக்கும், குறும்புத்தனமான காட்சியளிப்பவை டால்பின்கள். அதே வேளையில், பழமையான மற்றும் பெரிய கடல்வாழ் உயிரினங்களான ஹம்பேக், நீலத் திமிங்கலங்கள்.

இவற்றை, இலங்கையின் தெற்கு, கிழக்குப் பகுதிகளில் உல்லாச பயணத்தை மேற்கொள்ளும் போது, திமிங்கலம்/டால்பின் உங்களைக் கடந்து செல்லும் என்பதை நிச்சயமாக கூறலாம். அதேபோல, இலங்கையின் மேற்கு கடற்கரை பகுதிகளிலும் காணலாம்.

dolphinwatching

எங்கெங்கு....

திமிங்கலங்களைப் பார்ப்பதற்கு ஏற்ற இடமாக டோண்ட்ரா பாயிண்ட் (காலி, ஹிக்கடுவ, மிரிஸ்ஸா ஆகிய இடங்களில் இருந்து அணுகலாம்), திரிகோணமலை, கல்பிட்டிக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில், ஏராளமான டால்பின்கள் காணப்படுகின்றன.

எப்படி பார்ப்பது

டால்பின்கள் நம் பின்னால் அமர்ந்து சிரிப்பதும், முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படங்கள் வெளிநாடுகளில் சென்று திரும்பிய நம் நட்புகள் சமூக வலைதளங்களில் பதிவிடுவர். அதை பார்க்கும் நமக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை என ஏங்குவோம்.

அதேபோல, சென்னை கிழக்கு கடற்கரை பகுதியான நீலாங்கரையில், அவ்வவ்போது எட்டிப்பார்க்கும் டால்பின்களை, அந்த பகுதியில் வசிக்கும், மீனவர்கள் மட்டுமே பார்க்கும் வாய்ப்பு கிட்டும்.

whale watching

ஒரு மணி நேரத்தில் 26 முதல் 29 மைல்ஸ் வேகத்தில் கடக்கும் படகில் அமர்ந்து, கடல் அழகை ரசித்தவாறே, நொடி பொழுதில் துள்ளிக்குதிக்கும் திமிலங்களையும், டால்பின்களை பார்ப்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

அந்த மயிர் கூச்செரியும் உல்லாச பயணத்தை, நம் அண்டை நாடான இலங்கை, குறைந்த கட்டணத்தில் வழங்குகிறது. இத்தகைய பயணத்தை, இந்த கோடையில் மிஸ் பண்ணாதீங்க...!

இலங்கைக்கு செல்ல திட்டமிட்டிருந்தா..., திமிலங்களை பார்க்க மறக்காதீங்க...!

கிடைக்கும் வசதிகள்

இந்த த்ரில்லிங்கான கப்பல் பயணத்தின் போது, மிகப்பெரிய திமிலங்களை பார்க்க முன்பதிவு அவசியம். அப்ப நிச்சயமாக சீட் கிடைக்காது என நினைக்காதீங்க... கீழே கொடுத்துள்ள இணைதளத்தில் கப்பல் எந்தெந்த நாட்களில் செல்கிறது, முன்பதிவு செய்து கொள்ளும் வசதிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஒரு கப்பலில் லோயர், அப்பர் டெக் சேர்த்து 300 பேர் வரை பயணிக்கலாம். கப்பல் பயணத்தின் போது, கட்டணமின்றி ஸ்நாக்ஸ் கிடைக்கும்.

whalewatching

கப்பலில் நேரடி ஒளிபரப்பு கேமரா அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இது பயணத்தின் போது அமைதியான மற்றும் அதிர்ச்சியூட்டும் சுற்றுப்புற காட்சிகளை படம்பிடிக்கும் திறன் கொண்டது. கேலரி பகுதியில்'மினி பார்' கவுண்டரில் இருந்து beverages வாங்கலாம். மருத்துவ குழு, உயிர் காக்கும் குழுவும் கப்பலில் உங்களுடன் இருப்பர்.

நாம் செல்லும் சுற்றுலா ஒரு வித த்ரில் மற்றும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கனும்னு நினைக்கிற நபர்கள், தங்கள் குட்டீஸ்களுடன் இலங்கைக்கு சென்று, அங்கு குட்டி கப்பலில் கடல் அழகை ரசிப்பதோடு, மிகப்பெரிய பாலூட்டி இனத்தையும், அது கடலில் செய்யும் குறும்புத்தனத்தையும் காட்டி விட்டு தான் வாங்களேன்.

திமிலங்கத்தை பார்க்க முன்பதிவுக்கு...

https://whalewatching.navy.lk/

More News

    Read more about: sri lanka whale watching
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+