Search
  • Follow NativePlanet
Share
» »கோவாவில் நீங்க இந்த மாதிரி விளையாட்டுக்களையும் விளையாடலாம் தெரியுமா?

கோவாவில் நீங்க இந்த மாதிரி விளையாட்டுக்களையும் விளையாடலாம் தெரியுமா?

By Udhay

கோவா வெறும் பொழுதுபோக்குகளுக்கும், கேளிக்கைகளுக்கும் மட்டுமல்ல, இது மாதிரியான விளையாட்டுக்களுக்கும் பேமஸ். நீங்களும் மறக்காம முயற்சி பண்ணலாமே...

இந்தியாவின் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளில், மதுவுண்ட மயக்கமா இல்லை கவின் கடல் கண்ட கிறக்கமா என்ற பாகுபாடில்லாமல் பதின் வயதினரும், பல்லாண்டு வாழ்ந்தவரும் மகிழ்ச்சியில் திளைக்கின்ற இடம் ஒன்று உண்டெனில் அது கண்டிப்பாக கோவாவாகத்தான் இருக்க முடியும். கோவா நகரம் போர்துகீசியர்களின் ஆளுகையின் கீழ் இருந்ததால் அதன் வாழ்வு முறையில் போர்த்துகீசிய பாதிப்பு பளிச்சென தெரிவதை இங்கு முதல் முதலாக வரும் பயணிகள் கட்டாயம் உணர்வார்கள். இந்த நகரத்தில் வாழும் மக்கள் தங்களின் பாரம்பரியத்தின் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள். அதன் காரணமாகவே இந்நகரத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றிக் கொண்டிருக்கும் கட்டிடங்களையும், அடையாளச் சின்னங்களையும் கவனத்துடன் சிறந்த முறையில் பராமரித்து வருகிறார்கள். மேலும், பாங்காக், இபிஸா போன்ற உலகப் புகழ்பெற்ற கடற்கரை பிரதேசங்களுக்கு செல்வது போலவே கோவாவுக்கும் உலகம் முழுவதிலுமிருந்தும் பயணிகள் சுற்றுலா வருவதற்கு விரும்புகிறார்கள்.

 நீபோர்டிங்

நீபோர்டிங்

முழங்காலிட்டு அமர்ந்து படகு போன்ற சிறய பலகையில் கயிற்றைப் பற்றிக்கொண்டே வியப்பூட்டும் வகையில் செல்வது மிகவும் அலாதியாக இருக்கும்.

எங்கெல்லாம் விளையாடலாம்

கன்டோலிம் கடற்கரை, மோபார் கடற்கரை, ராஜ்பாஹா கடற்கரை

எப்போது செல்லலாம்

அக்டோபர் முதல் ஜூன் வரை

குறிப்பு - நீச்சல் தெரிந்திருக்கவேண்டும்

கயாகிங்

கயாகிங்

படகு துடுப்பிட்டு நகர்ந்து சென்று நம் ஆழ் மனதை ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் விளையாட்டு இது. அழகிய நீர் நிலைகளினூடே சென்று வரும் சிறப்பான விளையாட்டு.

எங்கெல்லாம் விளையாடலாம்

பெலோலெம் கடற்கரை, டோனா பௌலா, ஹோலன்ட் கடற்கரை

எப்போது செல்லலாம்

அக்டோபர் முதல் மே வரை

குறிப்பு - நீச்சல் தெரிந்திருக்கவேண்டிய கட்டாயமில்லை

 வேக் போர்டிங்

வேக் போர்டிங்

கயிற்றில் சுற்றுப்பட்டு கட்டப்பட்ட ஒரு கைப்பிடி ஒருபுறமும், கயிற்றின் மறு முனை படகிலும் கட்டப்பட்டு நீரில் பலகையை இட்டு, அதில் மிதந்து செல்வது, அழகான தருணம். அதற்கு வேக் போர்டிங் என்று பெயர்.

எங்கெல்லாம் விளையாடலாம்

பெலோலெம் கடற்கரை, டோனா பௌலா, ஹோலன்ட் கடற்கரை

எப்போது செல்லலாம்

அக்டோபர் முதல் மே வரை

குறிப்பு - நீச்சல் தெரிந்திருக்கவேண்டும்

வைன்ட் சர்பிங்

வைன்ட் சர்பிங்

காற்று அலைகளில் மிதந்து செல்லும் போட்டிக்கு வைண்ட் சர்பிங்க் என்று பெயர்.

எங்கெல்லாம் விளையாடலாம்

பெலோலெம் கடற்கரை, டோனா பௌலா, போக்மலோ கடற்கரை, வாகத்தோர் கடற்கரை, கலங்குட்டே, கோல்வா, பாகா, மிராமர் கடற்கரை

எப்போது செல்லலாம்

ஜனவரி முதல் மார்ச் வரை

குறிப்பு - நீச்சல் தெரிந்திருக்கவேண்டும்

 ஸ்கூபா டைவிங்

ஸ்கூபா டைவிங்

ஆழமான கடலுக்கு அடியில் உரிய பாதுகாப்போடு செல்லும் அழகிய நிகழ்வுகளுக்கு ஸ்கூபா டைவிங் என்று பெயர்.

எங்கெல்லாம் விளையாடலாம்

கிராண்டே தீவுகள், புனித ஜார்ஜ் தீவுகள், தேவாக் தீவுகள், பிக்யான் தீவுகள், நேத்ரானி தீவுகள்

எப்போது செல்லலாம்

அக்டோபர் முதல் ஏப்ரல் வரை

குறிப்பு - நீச்சல் தெரிந்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை

வைட் வாட்டர் ராப்டிங்

வைட் வாட்டர் ராப்டிங்

ஆற்று வெள்ளத்தில் குழுவாக சேர்ந்து பயணிப்பது வைட் வாட்டர் ராப்டிங் என்று பெயர்

எங்கெல்லாம் விளையாடலாம்

மாதேய் ஆறு, திலாரி நதி

எப்போது செல்லலாம்

ஜூன் முதல் செப்டம்பர் வரை

குறிப்பு - நீச்சல் தெரிந்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை

ஜெட் ஸ்கையிங்

ஜெட் ஸ்கையிங்

ஜெட் போன்ற வேகத்தில் தண்ணீரில் பாய்ந்து செல்லும் விளையாட்டு இது.

எங்கெல்லாம் விளையாடலாம்

கோல்வா, கலங்குட்டே, காண்டலிம், மிரார், மோபோர், ராஜ்பாகா கடற்கரை

எப்போது செல்லலாம்

அக்டோபர் முதல் மார்ச் வரை

குறிப்பு - நீச்சல் தெரிந்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.

பனானா டியூப் போட்

பனானா டியூப் போட்


எங்கெல்லாம் விளையாடலாம்

பெலோலெம் கடற்கரை, காண்டலிம், மிரார், மோபோர், ராஜ்பாகா கடற்கரை, பாகா, வாகத்தார் பீச்

எப்போது செல்லலாம்

அக்டோபர் முதல் மார்ச் வரை

குறிப்பு - நீச்சல் தெரிந்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை

பாராசைலிங்

பாராசைலிங்


எங்கெல்லாம் விளையாடலாம்

கலங்குட்டே கடற்கரை, டோனா பௌலா, கண்டாலிம் கடற்கரை, கோல்வா, வாகத்தோர் கடற்கரை

எப்போது செல்லலாம்

அக்டோபர் முதல் மார்ச் வரை

குறிப்பு - நீச்சல் தெரிந்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை

பிஃளைபோடிங்

பிஃளைபோடிங்

எங்கெல்லாம் விளையாடலாம்

பைனா பீச்

எப்போது செல்லலாம்

அக்டோபர் முதல் மார்ச் வரை

குறிப்பு - நீச்சல் தெரிந்திருக்கவேண்டும்

யாட்ச்ஸ் மற்றும் கிரியூஸ்

யாட்ச்ஸ் மற்றும் கிரியூஸ்

எங்கெல்லாம் விளையாடலாம்

மண்டோவி ஆறு, மய்யம் ஏரி, மிராமர் கடற்கரை, கண்டோலிம் கடற்கரை, பலோலெம் கடற்கரை

எப்போது செல்லலாம்

அக்டோபர் முதல் மே வரை

குறிப்பு - நீச்சல் தெரிந்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை

வாட்டர் ஸ்கையிங்

வாட்டர் ஸ்கையிங்

எங்கெல்லாம் விளையாடலாம்

கண்டோலம் கடற்கரை, கலங்குட்டே, பாகா பீச், மோபோர் பீச்

எப்போது செல்லலாம்

அக்டோபர் முதல் பிப்ரவரி வரை

குறிப்பு - நீச்சல் தெரிந்திருக்கவேண்டும்

பாடில்போர்டிங்

பாடில்போர்டிங்

எங்கெல்லாம் விளையாடலாம்

கண்டோலிம் கடற்கரை, டோனா பௌலா, ஹோலன்ட் கடற்கரை

எப்போது செல்லலாம்

அக்டோபர் முதல் மே வரை

குறிப்பு - நீச்சல் தெரிந்திருக்கவேண்டும்

 ஸ்னார்க்கெல்லிங்

ஸ்னார்க்கெல்லிங்

எங்கெல்லாம் விளையாடலாம்

சுஜிஸ் ரெக், பேட் தீவு, நேவி தீவு போன்ற இடங்களில்

எப்போது செல்லலாம்

அக்டோபர் முதல் மார்ச் வரை

குறிப்பு - நீச்சல் தெரிந்திருக்கவேண்டும்

Read more about: travel goa
இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more