Search
  • Follow NativePlanet
Share
» »கோவாவுக்கு வந்து இதக்கூட பண்ணாம போய்டாதீங்க! உலகமே சிரிக்கும்!

கோவாவுக்கு வந்து இதக்கூட பண்ணாம போய்டாதீங்க! உலகமே சிரிக்கும்!

By Udhaya

பழனிக்கு போயிட்டு பஞ்சாமிர்தம் வாங்காம வந்தாலோ, கொடைக்கானல்ல சாக்லேட்டும் திருநெல்வேலி போனா அல்வாவும் வாங்காம வந்தாலோ நீங்க அந்த இடத்துக்கே போன மதிப்பு இல்லைனு எப்படி சொல்றாங்களோ, அப்படி ஒரு விசயம்தான் கோவாவுல இந்த விசயத்த பதம் பார்க்காம வர்றது.

கோவா போகுறது சின்னவயசு கனவு.. பசங்களாம் சேர்ந்து திட்டம்போட்டும் இப்ப வரைக்கும் ஒன்னும் நடக்கலியேனு வருத்தப்பட வேண்டாம். இப்பதான் பெரிய பசங்களாகிட்டீங்களே.. இன்னுமா இதுக்கெல்லாம் பயந்துக்கிட்டு இருக்குறது. கிளம்பி வாங்க கோவாவுக்கு.. சும்மா ஜாலி பண்ணுங்க..

அடிச்சி தூக்கு.. ஆர்ப்பரிக்கும் விளையாட்டு

அடிச்சி தூக்கு.. ஆர்ப்பரிக்கும் விளையாட்டு

சின்ன பசங்கதான் விளையாட ஆசப்படுவாங்க.. உனக்கென்ன கழுத கெட்ட வயசுல விளையாட்டு வேண்டிக் கிடக்குனுலாம் யாரும் கேக்கமாட்டாங்க.. இந்த விளையாட்டு வயதுக்கு மேல் ஆனவர்களே விளையாடக்கூடியது. சில சின்ன பசங்களும் ஆசப்பட்டு விளையாடுறதுல பெரிய தப்புலாம் இல்ல.. பெற்றோர்களே இந்தமாதிரியான விளையாட்டுக்கள விளையாட பசங்கள என்கரேஜ் பண்றாங்கன்னா பாத்துக்கோங்களேன்.

உயரத்துல பறக்க ஆசையா - பேராசைலிங் போங்க

உயரத்துல பறக்க ஆசையா - பேராசைலிங் போங்க


* கோவாவில் வெளிநாட்டு பயணிகள், உள்நாட்டு பயணிகள் என்று பாரபட்சமின்றி அனைவரும் ஆர்வத்தோடு ஈடுபடும் விளையாட்டு என்றால் அது பேராசைலிங்தான்.

* அதாவது ஒரு மோட்டார் படகு உங்களை இழுத்துச்செல்ல பாராசூட் ஒன்றில் அந்தரத்தில் பறந்து செல்லும் சிலிர்ப்பூட்டும் கட்சியை கற்பனை செய்து பாருங்கள்.

* உங்கள் காலுக்கு கீழே கடல், தலைக்கு மேலே வானம் என்று அந்தரத்தில் ஆடி ஆடி செல்லும் அனுபவத்தை வார்த்தைகளால் எப்படி விவரிக்க முடியும்.

* அதிலும் கோவாவின் கலங்கூட் பீச்ச்சில் பேராசைலிங் மிகவும் பிரபலம் என்பதால் நீங்கள் கோவா வரும்போது கலங்கூட் பீச்சை தவறவிட்டுவிடாதீர்கள்.

கலங்குட் பீச்சுக்கு செல்வது எப்படி உள்ளிட்ட தகவல்களைப் பெற இதை சொடுக்குங்கள்

 கடலில் மீன்பிடித்து விளையாடுங்கள்

கடலில் மீன்பிடித்து விளையாடுங்கள்

*கோவா வந்தீர்கள் என்றால் மீன், நண்டு போன்ற கடல் உணவுகளை ருசிப்பதையும் மறந்து விடாதீர்கள்.

*அதுவும் உங்கள் கைகளாலேயே பிடிக்கப்பட்ட மீனை நீங்களே ருசிபார்ப்பது என்பது அலாதியான அனுபவம்.

*கோவா சுற்றுலாத்துறை உங்களுக்கு மீன்பிடிக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது. எனவே தூண்டிலும் கையுமாக கடலுக்கு சென்று நீங்களா அல்லது மீனா என்று ஒரு கை பாருங்கள்.

*யார் கண்டது அதிர்ஷ்டம் இருந்தால் இறாவும், சுராவும் உங்கள் தூண்டிலில் சிக்கட்டும்!

நீர்சறுக்கு

நீர்சறுக்கு

* ஆயிரம் அடி ஆழம் கொண்ட கடல் நீரின் மேலே முகத்தில் தண்ணீர் சிதறித்தெறிக்க சறுக்கி விளையாடும் அட்டகாசத்தை என்னவென்று சொல்வது?!

* காதல் மன்னன் ஜெமினி கணேசன் 'ஓஹோ எந்தன் பேபி..' என்று காஷ்மீரின் தால் ஏரியின் நீரில் சறுக்கிக்கொண்டே காதல் செய்வதை பார்த்திருப்பீர்கள்.

* அதேபோல நீங்களும் கோவாவின் எண்ணற்ற கடற்கரைகளில் இந்த நீர்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டு திளைக்கலாம்.

* இந்த கடற்கரைகளில் புதிதாக நீர்சறுக்கில் ஈடுபடுபவர்களுக்கு பயிற்சியும் வழங்கப்படுகிறது.

டிங்கி சைலிங்

டிங்கி சைலிங்

*டிங்கி என்ற ஒரு சிறிய பாய்மர படகில் நின்றுகொண்டு கடல் அலைகளின் ஊடாக சீறிப்பாய்ந்து செல்வது சாகச காதலர்களுக்கு நல்ல தீனியாக இருக்கும்.

*கோவாவில் டிங்கி சைலிங்கில் ஈடுபட விரும்புபவர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. அத்துடன் கடலில் இறங்குவதற்கு முன் உரிய பாதுக்கப்பு ஏற்பாடுகளையும் செய்து தருகிறார்கள்.

*எனவே அச்சமின்றி டிங்கி சைலிங்கில் ஈடுபடுங்கள், கண்டிப்பாக இது உங்களுக்கு ஒரு புது அனுபவமாக அமையும்.

 ஸ்கூபா டைவிங்

ஸ்கூபா டைவிங்

*கடலின் அடி ஆழத்தில் மீன்களோடு மீனாக ஆக்சிஜன் சிலிண்டரை கட்டிக்கொண்டு நீந்திச் செல்பவர்கள் சிலரை நீங்கள் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். இதற்கு பெயர்தான் ஸ்கூபா டைவிங் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது.

*கோவாவின் மற்ற நீர் விளையாட்டுகள் எல்லாம் கடலுக்கு வெளியே விளையாடுவது. ஆனால் அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டு ஒரு புது உலகத்தையே உங்கள் கண்முன் படைக்கும் ஸ்கூபா டைவிங்கை கோவா வரும்போது முயற்சித்து பாருங்கள்.

*ஒருவேளை நீங்கள் நீண்ட நாட்கள் கோவாவில் தங்க நேர்ந்தால் ஸ்கூபா டைவிங் செய்வது குறித்த பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயிலலாம்.

 கிராண்டே தீவில் ஸ்கனார்க்கெல்லிங்

கிராண்டே தீவில் ஸ்கனார்க்கெல்லிங்


கிராண்டே தீவில் ஸ்கனார்க்கெல்லிங்

சன்செட் அட் பேக்வாட்டர்

சன்செட் அட் பேக்வாட்டர்

சன்செட் அட் பேக்வாட்டர்

Alvesgaspar

நியூட்டி பீச்சில் டிரெக்கிங்

நியூட்டி பீச்சில் டிரெக்கிங்

நியூட்டி பீச்சில் டிரெக்கிங்

Lettkow

பேக்வாட்டர் டால்பின் சூட்டிங்

பேக்வாட்டர் டால்பின் சூட்டிங்

பேக்வாட்டர் டால்பின் சூட்டிங்

NASA.

குதூகலமாக நீபோர்டிங் செய்யலாம் வாங்க!

குதூகலமாக நீபோர்டிங் செய்யலாம் வாங்க!

முழங்காலிட்டு அமர்ந்து படகு போன்ற சிறய பலகையில் கயிற்றைப் பற்றிக்கொண்டே வியப்பூட்டும் வகையில் செல்வது மிகவும் அலாதியாக இருக்கும்.

எங்கெல்லாம் விளையாடலாம் தெரியுமா?

கன்டோலிம் கடற்கரை, மோபார் கடற்கரை, ராஜ்பாஹா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் இந்த விளையாட்டு பிரபலமாக இருக்கிறது. அதற்கு சாதகமான சூழ்நிலையும் நிலவுகிறது.

எப்போது செல்லலாம்

அக்டோபர் முதல் ஜூன் வரை இருக்கும் காலங்களில் இந்த விளையாட்டு விளையாட விரும்புபவர்கள் கோவாவுக்கு பயணியுங்களேன்.

குறிப்பு - கடலில் செல்வதாலும், வேகமாக செல்வதாலும் கட்டாயம் நீச்சல் தெரிந்திருக்கவேண்டும். இல்லையென்றால் விபத்துக்களுக்கு வாய்ப்பிருக்கிறது.

 கயாகிங்

கயாகிங்

படகு துடுப்பிட்டு நகர்ந்து சென்று நம் ஆழ் மனதை ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் விளையாட்டு இது. அழகிய நீர் நிலைகளினூடே சென்று வரும் சிறப்பான விளையாட்டு.

எங்கெல்லாம் விளையாடலாம்

பெலோலெம் கடற்கரை, டோனா பௌலா, ஹோலன்ட் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் இந்த விளையாட்டு பிரபலமாக இருக்கிறது. அதற்கு சாதகமான சூழ்நிலையும் நிலவுகிறது.

எப்போது செல்லலாம்

அக்டோபர் முதல் மே வரை இருக்கும் காலங்களில் இந்த விளையாட்டு விளையாட விரும்புபவர்கள் கோவாவுக்கு பயணியுங்கள்

குறிப்பு - நீச்சல் தெரிந்திருக்கவேண்டிய கட்டாயமில்லை

வேக் போர்டிங்

வேக் போர்டிங்

கயிற்றில் சுற்றுப்பட்டு கட்டப்பட்ட ஒரு கைப்பிடி ஒருபுறமும், கயிற்றின் மறு முனை படகிலும் கட்டப்பட்டு நீரில் பலகையை இட்டு, அதில் மிதந்து செல்வது, அழகான தருணம். அதற்கு வேக் போர்டிங் என்று பெயர்.

எங்கெல்லாம் விளையாடலாம்

பெலோலெம் கடற்கரை, டோனா பௌலா, ஹோலன்ட் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் இந்த விளையாட்டு பிரபலமாக இருக்கிறது. அதற்கு சாதகமான சூழ்நிலையும் நிலவுகிறது.

எப்போது செல்லலாம்

அக்டோபர் முதல் மே வரை இருக்கும் காலங்களில் இந்த விளையாட்டு விளையாட விரும்புபவர்கள் கோவாவுக்கு பயணியுங்கள்

குறிப்பு - நீச்சல் தெரிந்திருக்கவேண்டும்

வைன்ட் சர்பிங்

வைன்ட் சர்பிங்

காற்று அலைகளில் மிதந்து செல்லும் போட்டிக்கு வைண்ட் சர்பிங்க் என்று பெயர்.

எங்கெல்லாம் விளையாடலாம்

பெலோலெம் கடற்கரை, டோனா பௌலா, போக்மலோ கடற்கரை, வாகத்தோர் கடற்கரை, கலங்குட்டே, கோல்வா, பாகா, மிராமர் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் இந்த விளையாட்டு பிரபலமாக இருக்கிறது. அதற்கு சாதகமான சூழ்நிலையும் நிலவுகிறது.

எப்போது செல்லலாம்

ஜனவரி முதல் மார்ச் வரை இருக்கும் காலங்களில் இந்த விளையாட்டு விளையாட விரும்புபவர்கள் கோவாவுக்கு பயணியுங்கள்

குறிப்பு - நீச்சல் தெரிந்திருக்கவேண்டும்

ஸ்கூபா டைவிங்

ஸ்கூபா டைவிங்

ஆழமான கடலுக்கு அடியில் உரிய பாதுகாப்போடு செல்லும் அழகிய நிகழ்வுகளுக்கு ஸ்கூபா டைவிங் என்று பெயர்.

எங்கெல்லாம் விளையாடலாம்

கிராண்டே தீவுகள், புனித ஜார்ஜ் தீவுகள், தேவாக் தீவுகள், பிக்யான் தீவுகள், நேத்ரானி தீவுகள் உள்ளிட்ட இடங்களில் இந்த விளையாட்டு பிரபலமாக இருக்கிறது. அதற்கு சாதகமான சூழ்நிலையும் நிலவுகிறது.

எப்போது செல்லலாம்

அக்டோபர் முதல் ஏப்ரல் வரை இருக்கும் காலங்களில் இந்த விளையாட்டு விளையாட விரும்புபவர்கள் கோவாவுக்கு பயணியுங்கள்

குறிப்பு - நீச்சல் தெரிந்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை

வைட் வாட்டர் ராப்டிங்

வைட் வாட்டர் ராப்டிங்

ஆற்று வெள்ளத்தில் குழுவாக சேர்ந்து பயணிப்பது வைட் வாட்டர் ராப்டிங் என்று பெயர்

எங்கெல்லாம் விளையாடலாம்

மாதேய் ஆறு, திலாரி நதி உள்ளிட்ட இடங்களில் இந்த விளையாட்டு பிரபலமாக இருக்கிறது. அதற்கு சாதகமான சூழ்நிலையும் நிலவுகிறது.

எப்போது செல்லலாம்

ஜூன் முதல் செப்டம்பர் வரை இருக்கும் காலங்களில் இந்த விளையாட்டு விளையாட விரும்புபவர்கள் கோவாவுக்கு பயணியுங்கள்

குறிப்பு - நீச்சல் தெரிந்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை

 ஜெட் ஸ்கையிங்

ஜெட் ஸ்கையிங்

ஜெட் போன்ற வேகத்தில் தண்ணீரில் பாய்ந்து செல்லும் விளையாட்டு இது.

எங்கெல்லாம் விளையாடலாம்

கோல்வா, கலங்குட்டே, காண்டலிம், மிரார், மோபோர், ராஜ்பாகா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் இந்த விளையாட்டு பிரபலமாக இருக்கிறது. அதற்கு சாதகமான சூழ்நிலையும் நிலவுகிறது.

எப்போது செல்லலாம்

அக்டோபர் முதல் மார்ச் வரை இருக்கும் காலங்களில் இந்த விளையாட்டு விளையாட விரும்புபவர்கள் கோவாவுக்கு பயணியுங்கள்

குறிப்பு - நீச்சல் தெரிந்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.

பனானா டியூப் போட்

பனானா டியூப் போட்

எங்கெல்லாம் விளையாடலாம்

பெலோலெம் கடற்கரை, காண்டலிம், மிரார், மோபோர், ராஜ்பாகா கடற்கரை, பாகா, வாகத்தார் பீச் உள்ளிட்ட இடங்களில் இந்த விளையாட்டு பிரபலமாக இருக்கிறது. அதற்கு சாதகமான சூழ்நிலையும் நிலவுகிறது.

எப்போது செல்லலாம்

அக்டோபர் முதல் மார்ச் வரை இருக்கும் காலங்களில் இந்த விளையாட்டு விளையாட விரும்புபவர்கள் கோவாவுக்கு பயணியுங்கள்

குறிப்பு - நீச்சல் தெரிந்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை

 பிஃளைபோடிங்

பிஃளைபோடிங்

எங்கெல்லாம் விளையாடலாம்

பைனா பீச் உள்ளிட்ட இடங்களில் இந்த விளையாட்டு பிரபலமாக இருக்கிறது. அதற்கு சாதகமான சூழ்நிலையும் நிலவுகிறது.

எப்போது செல்லலாம்

அக்டோபர் முதல் மார்ச் வரை இருக்கும் காலங்களில் இந்த விளையாட்டு விளையாட விரும்புபவர்கள் கோவாவுக்கு பயணியுங்கள்

குறிப்பு - நீச்சல் தெரிந்திருக்கவேண்டும்

யாட்ச்ஸ் மற்றும் கிரியூஸ்

யாட்ச்ஸ் மற்றும் கிரியூஸ்

எங்கெல்லாம் விளையாடலாம்

மண்டோவி ஆறு, மய்யம் ஏரி, மிராமர் கடற்கரை, கண்டோலிம் கடற்கரை, பலோலெம் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் இந்த விளையாட்டு பிரபலமாக இருக்கிறது. அதற்கு சாதகமான சூழ்நிலையும் நிலவுகிறது.

எப்போது செல்லலாம்

அக்டோபர் முதல் மே வரை இருக்கும் காலங்களில் இந்த விளையாட்டு விளையாட விரும்புபவர்கள் கோவாவுக்கு பயணியுங்கள்

குறிப்பு - நீச்சல் தெரிந்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை

பாராசைலிங்

பாராசைலிங்

எங்கெல்லாம் விளையாடலாம்

கலங்குட்டே கடற்கரை, டோனா பௌலா, கண்டாலிம் கடற்கரை, கோல்வா, வாகத்தோர் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் இந்த விளையாட்டு பிரபலமாக இருக்கிறது. அதற்கு சாதகமான சூழ்நிலையும் நிலவுகிறது.

எப்போது செல்லலாம்

அக்டோபர் முதல் மார்ச் வரை இருக்கும் காலங்களில் இந்த விளையாட்டு விளையாட விரும்புபவர்கள் கோவாவுக்கு பயணியுங்கள்

குறிப்பு - நீச்சல் தெரிந்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை

வாட்டர் ஸ்கையிங்

வாட்டர் ஸ்கையிங்

எங்கெல்லாம் விளையாடலாம்


கண்டோலம் கடற்கரை, கலங்குட்டே, பாகா பீச், மோபோர் பீச் உள்ளிட்ட இடங்களில் இந்த விளையாட்டு பிரபலமாக இருக்கிறது. அதற்கு சாதகமான சூழ்நிலையும் நிலவுகிறது.

எப்போது செல்லலாம்

அக்டோபர் முதல் பிப்ரவரி வரை இருக்கும் காலங்களில் இந்த விளையாட்டு விளையாட விரும்புபவர்கள் கோவாவுக்கு பயணியுங்கள்

குறிப்பு - நீச்சல் தெரிந்திருக்கவேண்டும்

 பாடில்போர்டிங்

பாடில்போர்டிங்

எங்கெல்லாம் விளையாடலாம்

கண்டோலிம் கடற்கரை, டோனா பௌலா, ஹோலன்ட் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் இந்த விளையாட்டு பிரபலமாக இருக்கிறது. அதற்கு சாதகமான சூழ்நிலையும் நிலவுகிறது.

எப்போது செல்லலாம்

அக்டோபர் முதல் மே வரை இருக்கும் காலங்களில் இந்த விளையாட்டு விளையாட விரும்புபவர்கள் கோவாவுக்கு பயணியுங்கள்

குறிப்பு - நீச்சல் தெரிந்திருக்கவேண்டும்

 ஸ்னார்க்கெல்லிங்

ஸ்னார்க்கெல்லிங்

எங்கெல்லாம் விளையாடலாம்

சுஜிஸ் ரெக், பேட் தீவு, நேவி தீவு உள்ளிட்ட இடங்களில் இந்த விளையாட்டு பிரபலமாக இருக்கிறது. அதற்கு சாதகமான சூழ்நிலையும் நிலவுகிறது.

எப்போது செல்லலாம்

அக்டோபர் முதல் மார்ச் வரை இருக்கும் காலங்களில் இந்த விளையாட்டு விளையாட விரும்புபவர்கள் கோவாவுக்கு பயணியுங்கள்

குறிப்பு - நீச்சல் தெரிந்திருக்கவேண்டும்

Read more about: goa கோவா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X