Search
  • Follow NativePlanet
Share
» »Adventure Travel: சாகச சுற்றுலா போறீங்களா? அப்படினா கொஞ்சம் படிங்க ப்ளீஸ்..!

Adventure Travel: சாகச சுற்றுலா போறீங்களா? அப்படினா கொஞ்சம் படிங்க ப்ளீஸ்..!

தமிழ் திரைப்படமான'ஜெய்ஹிந்த்' படத்தில், பழம்பெரும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி ஒரு காட்சியில், 'தமிழ்நாட்டு மானத்தை நான் தான் காப்பாத்த போறேன். தலை கீழாகத்தான் குதிப்பேன்' என, செய்வது போல தான், இன்றைய இளைய தலைமுறையினர் சமூக வலைதளங்களில் 'லைக்ஸ்' அள்ள 'த்ரில்', வித்தியாசமாக இருக்க வேண்டும் என, எவ்வித திட்டமிடல் இல்லாமல் முயற்சிப்பது அதிகரித்து வருகிறது.

இது, ஒரு சில நேரங்களில் அவர்களின் பாதுகாப்புக்கு வேட்டு வைக்கும் நிலைக்கு இட்டு சென்ற பல சம்பவங்கள் நமக்கு நினைவூட்டுகிறது.

கோடை விடுமுறை நெருங்கி வரும் நிலையில், இப்பவே பலர் அங்கு சுற்றுலா போலாம் என, ஆழ் மனதில் ஒரு முறையாவது சிந்தனையை தட்டி இருப்பர். இவற்றில் ஒரு சிலர் 'அட்வென்சர்' சுற்றுலா போலாமா? என்று கூட நினைச்சுட்டு, கிடைக்கும் நேரத்தில் 'கூகுள்' பக்கம் போயிட்டு போயிட்டு வந்து இருப்பார்கள்.

சுற்றுலாவில், சாகச சுற்றுலா செல்லலாம் என, திட்டமிட்டு இருக்கும் உங்களுக்கு தான் இந்த கட்டுரை... மறக்காம ஒரு முறை வாங்க பார்ப்போம்..!

adventuretips1

சேரும் இடம் பற்றிய ஆய்வு அவசியம்:

பாரா கிளைடிங், ராஃப்டிங், ஹாட் ஏர் பலூன், டிரெக்கிங், பங்கி ஜம்பிங்' என, சாகச விளையாட்டுகள், செயல்பாடுகள் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்று வருகிறது.

முதலில், நீங்கள் திட்டமிட்டிருக்கும் இடத்துக்கு செல்வதற்கு முன், உங்கள் திட்டமிடலை எளிதாகவும், வசதியாகவும் மாற்ற பயணத்தின் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொள்வது அவசியம். சேருமிடத்தை பற்றி ஆராய்வது செய்வது சிறந்த சாகச பயண இலக்கைத் தேர்வு செய்ய உதவும்.

த்ரில் நிறைந்த, வித்தியாசமான சாகச சுற்றுலா, விளையாட்டு, செயல்பாடுகளில் செல்ல, ஈடுபட விரும்பினால், நீங்கள் பங்கேற்கும் சாகச சுற்றுலா அல்லது விளையாட்டை நடத்தும் நிறுவனத்தைப் பற்றி நன்கு ஆராய்வது அவசியம்.

அதாவது, இணையத்தில் அந்நிறுவனத்தைப் பற்றி அளித்திருக்கும் ரேட்டிங் மற்றும் விமர்சனங்கள், அங்கு சென்று திரும்பிய சுற்றுலா பயணிகள் பலர் பகிர்ந்து இருக்கும் அனுபவங்களை படித்துப் பார்த்து முடிவு செய்யுங்கள்.

எப்போது பயணம் செய்ய வேண்டும்; முன்பதிவு செய்ய வேண்டும் என்பதை கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது, அங்குள்ள சீசன், வானிலை மற்றும் விலை ஆகியவை குறித்து முன்னரே தெரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் சாகசப் பயணத்தை திட்டமிடுகிறீர்கள் எனில், உங்கள் பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வானிலை பற்றி நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். சேரும் இடத்தின் தட்பவெப்ப நிலைகளை வழங்கும் உள்ளூர் வானிலை இணையதளங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

உங்கள் பர்சை பதம் பார்க்கும் அதிக கட்டணங்கள், கூட்ட நெரிசலைத் தவிர்க்க, உங்கள் பயணத்தை திட்டமிடுவது நல்லது. பிரபலமான பயண இடத்துக்குச் செல்ல திட்டமிட்டிருந்தால், பயணத்தையும், டிக்கெட்டுகளையும் முன்கூட்டியே பதிவு செய்யுங்கள். எல்லோரும் செல்லும் நேரங்கள் தவிர்த்து, அங்குள்ள காலநிலை, அழகை ரசிக்கும் வகையில் திட்டமிட்டு செல்லுங்கள்.

அங்கு நீங்கள் எந்த விளையாட்டை விளையாட முடிவு செய்தாலும், அதற்கு மனதளவில் தயாராகுங் கள். ஆசை இருப்பதால் அல்லது மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக முடிவு செய்ய வேண்டாம். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மட்டுமே அவற்றை மேற்கொள்ளுங்கள்.

adventuretips2

பயணத்தை பீல் பண்ண லைட் வெயிட் அவசியம்:

உங்கள் பயணத்திற்கான உடமைகளை பேக்கிங் செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம், பயணத்தின் நாட்கள் மற்றும் காலம். பயணத்திற்கு என்ன தேவை என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் உங்களுடன் எடுத்துச் செல்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த, பேக்கிங் பட்டியலை உருவாக்கவும். உடமைகளை அதிகமாகப் பேக் செய்யாமல், குறைவாக எடுத்து செல்லவும்.

குடைகள், ரெயின்கோட் கள், சன்கிளாஸ்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்ற சாகச பயணத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் பயணத்தின் சுமையை குறைக்க, தேவையற்ற பொருட்களை அகற்றவும்.

பாதுகாப்பு முக்கியம்

சாதிக்கும் 'திரில்' உணர்வும், ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ள சூழ்நிலையும் தான் இந்த சாகச விளையாட்டுகளில் சுவாரஸ்யம் கூட்டுகின்றன. எனினும், ஒருவர் அத்தகைய செயலில் ஈடுபடுவதற்கு முன், அவற்றை எப்படி திறம்பட விளையாடுவது, பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

சாகச செயல்பாட்டின் மையமான அம்சமே பாதுகாப்பு தான். பயிற்சியாளர்கள் சொல்வதை கூர்ந்து கவனித்து, அவர்கள் சொல்கிறபடி செய்யுங்கள். எச்சரிக்கைகள் எதையும் அலட்சியப்படுத்தக் கூடாது.

ஹெல்மெட், கவசம் என அவர்கள் பரிந்துரைக்கும் பாதுகாப்பு சாதனங்களை கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும். உங்களால் முடியாது என்று நீங்கள் உறுதியாக உணரும் சாகசங்களில் ஈடுபட்டு, உங்கள் உடல் நலத்தை கெடுத்து கொள்ளக் கூடாது.

நீங்கள் இதற்கு முன்பு ஈடுபட்டிருக்காத சாகசங்கள் அல்லது பயணங்கள் மேற்கொள்கிறீர்கள் எனில், அதற்கு உங்கள் உடல் ஒத்துழைக்குமா என்று மருத்துவரிடம் கலந்து ஆலோசித்துக் கொள்ளுங்கள். தேவையெனில் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்....

adventuretips

காப்பீடு அவசியம்

சாகசப் பயணங்களின் போது ஏற்படும் எதிர்பாராத விபத்துகள் அல்லது அசம்பாவிதங்களின் போது, உங்களை பாதுகாத்துக் கொள்ள ஒரு பயணக் காப்பீட்டு பாலிசியை வாங்கிக் கொள்ளுங்கள். இந்தப் பாலிசியை வாங்குவதற்கு முன்பாக, என்ன மாதிரியாக விஷயங்களில் கவர் செய்யும், உங்கள் பயணத்தின் போது ஏற்பட வாய்ப்புள்ள இடர்களுக்கு பாதுகாப்பு அளிக்குமா என்பதையெல்லாம் துறை சார்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை செய்து முடிவெடுங்கள்.

சுற்றுலா செல்லும் முன் எந்தெந்த நாடுகளில் தடுப்பூசிகள் தேவை என்பதை அறிய, நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இணையதளத்தைப் பார்வையிடவும். உங்களுக்கு தடுப்பூசி தேவைப்பட்டால், உங்கள் பயணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே தடுப்பூசி போடுங்கள், ஏனெனில் உங்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க நேரம் தேவை. சாகசச் செயல்களைச் செய்யும்போது நிறைய தண்ணீர் குடியுங்கள், அது உங்களை நீரேற்றமாக வைத்திருக்கும்.

இது தவிர, உங்களின் தடுப்பூசி ஷாட்கள், பேண்டேஜ்கள், ஆன்டிபயாடிக் மருந்துகள் மற்றும் ஆன்டிபயாடிக் கிரீம்கள் போன்றவற்றைக் கொண்ட உங்கள் அவசர கால மருத்துவப் பெட்டியை உடன் எடுத்துச் செல்ல மறக்காதீர்கள்.

உங்கள் இலக்குக்குச் செல்வதற்கு முன் உங்கள் சுற்றுலா வழிகாட்டிகளிடம் பயண ஆலோசனையைப் பெறுவதும் அவசியம். ஆஸ்துமா மற்றும் இதய நோய் போன்ற பாதிப்புகளில் எவையேனும் உங்களுக்கு இருந்தால், சாகச செயல்பாடுகளை தவிர்ப்பது நல்லது. ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், உரிய ஆலோசனைக்கு பின் ஈடுபடுவது மிகவும் சிறந்தது.

ஆடை விஷயத்தில் கவனம்

ஒரு சாகச பயணத்திற்கு சரியான ஆடையை கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம். இதை சரியாக தேர்வு செய்ய,'அட்வென்ச்சர் அவுட்ஃபிட்டர்' இணையதளங்களைப் பார்வையிட்டு, உங்கள் பயணத்துக்கு ஏற்ற மிகவும் பொருத்தமானதைத் தேர்வு செய்யவும்.

பயணம் குறித்து ஒரு இறுதி முடிவை எடுப்பதற்கு முன், அதன் குழு உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்வது மட்டுமின்றி, எந்த தயக்கமும் இல்லாமல் கேள்விகளைக் கேட்பது முக்கியம். ஏற்கனவே அந்த இடங்களுக்கு சென்றுள்ள சுற்றுலா பயணிகள், நண்பர்கள் எடுத்துரைக்கும் பரிந்துரைகளை கவனத்தில் கொள்ள எவ்வித தயக்கமும் கொள்ள வேண்டாம்.

ஆவணங்கள், பாதுகாப்பு

சாகசப் பயணம் மேற்கொள்கிறீர்கள் என்றால், பாதுகாப்பாக இருப்பது மிகவும் முக்கியம். சாகசச் செயலில் ஈடுபடும்போது எந்த ஆபத்தையும் சந்திக்க நேரிடும். உதாரணம், கொள்ளையடிக்கப்படுவது அல்லது காயப்படுத்தப்படுவது போன்ற நிகழ்வுகள் உங்கள் பயண சிறந்த அனுபவத்தை கெடுத்துவிடும்.

மோசடி செய்பவர்களிடமிருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில் அவர்கள் பணம் அல்லது உங்களுக்கு மதிப்பு மிக்க எதையும் பெற உங்களை ஏமாற்றலாம். பயண உதவிக் குறிப்புகள் மற்றும் உங்கள் பயண வழிகாட்டிகளிடமிருந்து நீங்கள் சேருமிடத்தின் குற்றம் சார்ந்த நிகழ்வுகள், ஆபத்துகள் பற்றிய அறிவை அறிந்துகொள்ளுங்கள். இதன் வாயிலாக, பாதுகாப்பு உதவிக்குறிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்வது உங்களை எதிர்பாராத சூழ்நிலைகளில் இருந்து பாதுகாப்பாகவும் வைத்திருக்கும்.

நோ செல்பி

ஆபத்தான இடங்களில் செல்பி எடுப்பதைவிட, பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள். தனியாக செல்வதைவிட, நண்பர்கள், தெரிந்தவர்கள் உடன் இருந்தால், கூடுதல் நம்பிக்கையும் உற்சாகமும் இருக்கும்.

பயணம் வெளிநாடாக இருந்தால், அந்த பயணத்திற்கான பாஸ்போர்ட் மற்றும் விசா உட்பட அனைத்து உண்மையான ஆவணங்களையும் எடுத்து செல்லுங்கள். ஆவணங்களை நீங்கள் இழந்தால், உங்கள் ஆவணங்களின் கூடுதல் நகல்களை உருவாக்குவது முக்கியம்.

சாகசப் பயணத்திற்காகப் பயணிக்கும்போது உங்களுக்குத் தேவையான அனுமதிகளைப் பரிசீலிக்கவும். உங்களிடம் பாஸ்போர்ட் இல்லையென்றால், பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து பாஸ்போர்ட்டைப் பெறுங்கள்.

நாடுகளுக்கான ஆன்லைன் இணையதளங்களில் விசா தேவைகளைப் பார்க்கவும். நீங்கள் மருந்துகளை எடுத்துக் கொண்டால், உங்கள் மருத்துவ ஆவணங்களை உங்களுடன் எடுத்துச் செல்ல மறக்காதீர்கள். மேலும் உங்கள் அடையாளத்தையும், வயதையும் நிரூபிக்கும் போட்டோ அடையாள அட்டையை எப்போதும் உடன் வைத்திருங்கள்.

உங்கள் பயணத்தை மறக்க முடியாததாக மாற்ற, உங்கள் சாகச பயணத்திற்கான மேலே கூறப்பட்ட அனைத்து உதவிக் குறிப்புகளையும் பின்பற்றுவது முக்கியம். பயணத்திற்கு முன் இரண்டு முக்கியமான விஷயங்களை மனதில் கொள்ளுங்கள். புத்திசாலித்தனமாக தேவையானவற்றை பேக் செய்யுங்கள், புத்திசாலித்தனமாக பாதுகாப்பான இடங்களுக்கு பயணம் செய்யுங்கள். இந்த கோடையில் நீங்க மேற்கொள்ளும் பயணம் ஒரு நல்ல பயணமாக அமையட்டும்....!

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+