Search
  • Follow NativePlanet
Share
» » IUGS புவியியல் தளங்களில் இந்தியாவிலிருந்து இடம் பிடித்த மவ்ம்லு குகையின் சிறப்புகள் இதோ!

IUGS புவியியல் தளங்களில் இந்தியாவிலிருந்து இடம் பிடித்த மவ்ம்லு குகையின் சிறப்புகள் இதோ!

மேகாலயாவின் சகாப்தத்திற்கு பெயர் பெற்ற, மேகாலயாவின் சோஹ்ராவில் அமைந்துள்ள மவ்ம்லு குகை உலகின் 'முதல் 100 IUGS (சர்வதேச புவியியல் அறிவியல் ஒன்றியம்) புவியியல் தளங்களில் ஒன்றாக யுனெஸ்கோவின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இது மொத்த இந்தியாவிற்குமே மிகவும் பெருமையான ஒரு தருணமாகும்.

56 நாடுகளைச் சேர்ந்த 181 தளங்களில் இந்தியாவிலிருந்து இந்த மவ்ம்லு குகை முதல் 100 இடங்களில் இடம் பிடித்துள்ளது. இதனைப் பற்றிய மேலும் சிறப்புகள் என்னென்ன என்பதை இங்கே தெரிந்துக் கொள்வோம்!

புவியியல் அறிவியலின் சர்வதேச ஒன்றியம் (IUGS)

புவியியல் அறிவியலின் சர்வதேச ஒன்றியம் (IUGS)

புவியியல் அறிவியலின் சர்வதேச ஒன்றியம் (IUGS) என்பது புவியியல் நேரத்தை அந்த இடம் உருவான நேரம், காலம், சகாப்தம் மற்றும் வயதை குறித்து அந்த இடத்தை துல்லியமாக வரையறுக்கிறது. அதன் 60வது ஆண்டு நிறைவையொட்டி, 2022 அக்டோபரில் பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் திரையிடல்கள் மற்றும் விருது நிகழ்வுகளுடன் நடத்தப்படும். அதனுடன் தேர்ந்தேடுக்கப்பட்ட இந்த இடங்களின் டாக்குமெண்டரியும் வெளியிடப்படும்.

200 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட குகை

200 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட குகை

1844 இல் லெப்டினன்ட் யூல் ஆல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மவ்ம்லு குகை மொத்தம் 7 கிமீ நீளமுள்ள குகைப் பாதைகளைக் கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தின் நான்காவது மிக நீளமான குகை என்று நம்பப்படுகிறது.

குகைக்கு உள்ளே இருக்கும் அதிசய குளம்

குகைக்கு உள்ளே இருக்கும் அதிசய குளம்

குகைக்கு உள்ளே அமைந்து இருக்கும் முக்கிய அம்சமான குளம், குகை வழியாக செல்லும் ஐந்து வெவ்வேறு ஆறுகளிலிருந்து உருவாகியதாகும். உலகளாவிய காலநிலை அமைப்பைப் புரிந்துகொள்வதற்கு இந்த ஸ்டாலாக்மிட்டுகள் முக்கியமானவை.

பூமியில் அதிக மழை பெய்யும் இடமாக அறியப்படும் ஒரு முக்கிய பகுதியான மவ்ம்லு குகையிலிருந்து கடந்த 50 ஆண்டுகால ஸ்டாலக்மைட்டின் வளர்ச்சியை அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர் என்று குறிப்பிடத்தக்கது.

காலநிலை மாற்றம்

காலநிலை மாற்றம்

வடகிழக்கு இந்தியாவில் குளிர்கால மழை அளவுக்கும் பசிபிக் பெருங்கடலில் உள்ள தட்பவெப்ப நிலைகளுக்கும் இடையே அசாதாரண தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். குகையின் கால் பகுதி மட்டுமே சூரிய ஒளியை பெறுகிறது. மீதமுள்ள குகையை இருளால் சூழப்பட்டுள்ளது.

குகை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து வரும் ஸ்டாலாக்மிட்டுகள், கடந்த பல ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் கடுமையான, பல வருட வறட்சி மீண்டும் நிகழும் என்பதைக் குறிக்கிறது.

செல்வதற்கு சிறந்த நேரம்

செல்வதற்கு சிறந்த நேரம்

கிரெம் மவ்ம்லு குகை சிரபுஞ்சியிலிருந்து மேற்கே அரை கிலோமீட்டர் தொலைவிலும், ஷில்லாங்கிலிருந்து 57.1 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மழைக்காலம் இந்த இடத்திற்குச் செல்ல சிறந்த நேரம்.

More News

    Read more about: cave sohra meghalaya
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+