Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருச்சி » வானிலை

திருச்சி வானிலை

அக்டோபர் மற்றும் பிப்ரவரிக்கு இடைப்பட்ட குளிர் காலத்தில் திருச்சியை சுற்றிப்பார்ப்பது மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த மாதங்களில் கால நிலையானது மிகவும் இனிமையானதாக இருக்கிறது. இப்பகுதியில் ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டு நிகழ்ச்சி குளிர் காலத்தில் நடத்தப்படும் மிகவும் பிரபலமான விளையாட்டு நிகழ்ச்சியாகும்.

கோடைகாலம்

திருச்சியில் கோடைகாலத்தில் முக்கியமாக பகல் நேரம் சூடாகவும் வறண்டும் காணப்படும். தென் கிழக்கு பருவ காற்று காரணமாக மாலை நேரம் சற்று வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக காணப்படும். மார்ச் முதல் ஜூன் வரை இருக்கும் கோடை காலத்தில் தட்ப வெப்பம் 30 டிகிரி செல்சியஸில் இருந்து 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். கோடை காலத்தில் இங்கு சுற்றுப் பயணம் செய்வது உகந்ததல்ல.

மழைக்காலம்

திருச்சி ஜூலை முதல் அக்டோபர் வரையுள்ள கால இடைவெளியில் பருவ மழை பெறுகிறது. இந்த மாதங்களில் மிதமானது முதல் அதிக மழை இருப்பதால் வானிலை குளிர்ச்சியாக காணப்படுகிறது. இந்த கால கட்டத்தில் வானிலையானது குளிர்ச்சியாக காணப்படும்.

குளிர்காலம்

திருச்சியின் குளிர்காலம் இனிமையானதாக இருக்கிறது.  வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸில் இருந்து  25 டிகிரி செல்சியஸ் வரை மாறுபடுகிறது.  நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் குளிர்காலத்தை குறிக்கின்றன. இந்த நகரத்தை சுற்றி பார்க்க மிகவும் சிறந்த பருவம் குளிர்க்காலம்.