Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டுயன்சாங் » வானிலை

டுயன்சாங் வானிலை

டுயன்சாங்கின் பருவநிலை வருடம் முழுவதுமே மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.

கோடைகாலம்

டுயன்சாங்கில் மார்ச் மாதம் தொடங்கும் கோடைக்காலம் மே மாதம் வரை நீடித்திருக்கும். இந்நாட்களில் டுயன்சாங்கின் பருவநிலை சுற்றுலாவிற்கு மிகவும் ஏற்ற வகையில் இருக்கும். இந்நாட்களில் இருக்கக் கூடிய அதிகபட்ச வெப்பநிலையாக 31°C–ம், குறைந்தபட்ச வெப்பநிலையாக 16°C–ம் இருக்கும்.

மழைக்காலம்

ஜுன் மாதத்தின் இறுதியில் டுயன்சாங்கில் துவங்கும் மழைக்காலம் செப்டம்பர் மாத இறுதி வரையிலும் நீடித்திருக்கும். நாள் முழுவதும் மழை பெய்து கொண்டே இருப்பதால் இந்த காலத்தில் சுற்றுலா வருவது கடினமான அனுபவமாக இருக்கும். இதில் ஆகஸ்டு மாதத்தில் மிக அதிகபட்சமான மழைப்பொழிவு இருக்கும். இந்நாட்களில் டுயன்சாங்கின் வெப்பநிலையும் கணிசமான அளவிற்கு குறைந்து விடும்.

குளிர்காலம்

வெப்பநிலை 4°C அளவிற்கு குறைந்து விடுவதால் டுயன்சாங்கின் குளிர்காலம் சற்று குளிராகவே இருக்கும். மிகவும் மோசமாக இருக்கும் குளிர்காலங்களில் சுற்றுப் பயணம் மிகவும் கடினமானதாகவும், சுற்றுப்பயணம் செய்ய முடியாததாகவும் இருக்கும். இந்நாட்களில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலையா 24°C இருக்கும். டிசம்பர் மாதத்தில் உள்ளே வரும் குளிர்காலம் பிப்ரவரி மாதம் வரையிலும் நீடித்திருந்து, ஜனவரி மாதத்தில் கடுங்குளிரை கொடுக்க வல்லதாக இருக்கும்.