Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உத்வாடா » வானிலை

உத்வாடா வானிலை

வெப்பமான கோடைக்காலம், மிதமான மழை முதல் அதிகமான மழை, இனிமையான குளிர் காலம்; இது தான் உங்களுக்கான உத்வாடாவின் வானிலை அறிக்கை. அதனால் இந்த புனித ஸ்தலத்துக்கு சுற்றுலா செல்ல வேண்டுமானால் பருவக்காலம் மற்றும் கோடைக்காலத்தை தேர்ந்தெடுக்காதீகள்.

கோடைகாலம்

உத்வாடாவில் கோடைக்காலம் வெப்பமாகவும் வறட்சியாகவும் இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 41° செல்சியசாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை  24° செல்சியசாகவும் பதிவாகும். கோடைக்காலம் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நீடிக்கும்.

மழைக்காலம்

மழைக்காலத்தின் போது உத்வாடாவில் மிதமானது முதல் கனமான மழை பெய்யக்கூடும். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கே மழைக்காலம் நீடிக்கும்.

குளிர்காலம்

குளிர் காலத்தில் வெப்ப நிலை 31° செல்சியஸ் முதல் 12° செல்சியஸ் வரை பதிவாகும். உத்வாடா செல்வதற்கு உகந்த நேரமாக விளங்குகிறது குளிர் காலம்.