Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உக்ருள் » வானிலை

உக்ருள் வானிலை

இதமான கோடை காலமே உக்ருளுக்கு சுற்றுலா செல்ல உகந்த பருவம் ஆகும். வசந்த காலம் தனது இனிய அடையாளத்தை விட்டுச்செல்வதால் ஆழகிய நீரூற்றுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பசுமையான இடங்களை பார்ப்பதற்கு இதுவே சரியான பருவம் ஆகும். கோடை காலங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவுவதால் ஒரிடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்கு செல்வது மிகவும் சுலபம். 

கோடைகாலம்

உக்ருளின் இனிமையான கோடைகாலம் மார்ச் மாதத்தில் தொடங்கி மே மாதம் வரை நீடிக்கிறது. உக்ருளின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே, 33 ° C மற்றும் 20 ° C ஆகும். கோடையின் இனிமையான வானிலை காரணமாக, ஏராளமான சுற்றுலா பயணிகள் கோடை காலத்தில் உக்ருளுக்கு  வருகை தருகின்றனர்.

மழைக்காலம்

மணிப்பூர் மாநிலத்தின் பிற பகுதிகளை போலவே உக்ருளும் மழைக்காலத்தில் கடினமான மழைப்பொழிவிற்கு உள்ளாகிறது. இங்கு ஜூன்மாதத்தில் தொடங்கும் பருவமழை  செப்டம்பர் மாதம் வரை நீடிக்கிறது. சில நேரங்களில் இது அக்டோபர் வரை கூட  நீடிக்கும். கடினமான மழையின் காரணமாக வெளியே நடமாடுவது மிகவும் சிரமமாகும். எனவே சுற்றுலா பயணிகள் மழைகாலத்தில் உக்ருளுக்கு வருவதை தவிர்பது நல்லது.

குளிர்காலம்

குளிர்காலத்தில், உக்ருளின் வெப்ப நிலை மிகவும் குறைந்து கடுமையான குளிர் மற்றும் உறைபனி ஏற்படும். இங்கு குளிர்காலம் டிசம்பர் மாதத்தில் தொடங்கி பிப்ரவரி வரை நீடிக்கிறது. இந்த காலத்தில் உக்ருளின் குறைந்த பட்ச வெப்பநிலை 3 ° C ஆகும்.  எனவே சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல்  குளிர்காலங்களில் உக்ருளுக்கு பயணம் செய்ய வேண்டாம்.