தயாரா புக்யால், கடல் மட்டத்திலிருந்து சுமார் 3048 அடி உயரத்தில், உத்தர்காஷியில் அமைந்துள்ளது. இந்த அழகிய புல்வெளிக்கு நம்மை கூட்டிச் செல்லும் பாதை உத்தர்காஷி-கங்கோத்ரி சாலையில் அமைந்துள்ள பத்வாரி என்ற இடத்தில் இருந்து பிரிகிறது.
தயாரா புக்யாலை அடைய வேண்டுமானால் பயணிகள், வாகனங்கள் மூலம் எளிதாக அடையக் கூடிய பர்சு கிராமத்தில் இருந்து, சுமார் 8 கி.மீ. தூரம் நடைப்பயணம் செய்ய வேண்டி இருக்கும்.
குளிர்காலங்களில், இங்கு சுமார் 28 சதுர கி.மீ. பரப்பளவில் விரிந்து கிடக்கும் மலைச்சரிவுகளில் பனிச்சறுக்கு விளையாட்டுக்களில் ஈடுபட்டு மகிழலாம். இமயமலையின் அற்புதமான காட்சிகளையும் இங்கிருந்து கண்டு களிக்கலாம்.
கூடுதலாக, சுற்றுலாப் பயணிகள் ஒரு சிறு ஏரியின் அருகில், கூடாரங்கள் அமைத்தும் தங்கலாம். தயாரா புக்யாலிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சுத்தமான தண்ணீர் உடைய ஏரியான தோதிதாலுக்குச் செல்லும் பயணமும் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக உள்ளது.



Click it and Unblock the Notifications