கோவாவில் நன்றாக பராமரிக்கப்பட்டு வரும் கோட்டைகளுக்கு மத்தியில் சப்போரா கோட்டை அந்தளவுக்கு நல்ல நிலையில் இல்லை என்றே சொல்ல வேண்டும். எனினும் போர்த்துகீசிய கட்டிடக்கலையும், பாசி படர்ந்த கோட்டையின் பச்சை வண்ண எழில் தோற்றமும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கும் அம்சங்கள்.
சப்போராவின் வரலாற்று முக்கியத்துவம்
சப்போரா கோட்டை 1617-ஆம் ஆண்டு, ஹிந்து பேரரசுகளின் தாக்குதல்களை சமாளிப்பதற்காக போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டது. அப்படி இருந்தும் இந்தக் கோட்டை அகுவாடா கோட்டையை போல் அல்லாமல், ஹிந்துக்களால் கைப்பற்றப்பட்டுவிட்டது. இந்தக் கோட்டையின் சிதைவுகள் இன்றும் அந்த காலங்களில் நடந்த போர்களின் சாட்சியாக எஞ்சியுள்ளன.
போர்த்துகீசியர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே ஷாப்புரா என்ற ஒரு ஒப்பந்தம் இருந்து வந்தது. அந்த ஒப்பந்தத்தின் பேரிலேயே இந்தக் கோட்டை கட்டப்பட்டது.
இதன் காரணமாகவே இந்தக் கோட்டை ஷாப்பூர் கோட்டை என்ற மற்றொரு பெயரிலும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோட்டையை 1892-ஆம் ஆண்டில் போர்த்துகீசியர்கள் கைவிட்டாலும், போர் காலங்களில் பயன்படுத்தப்பட்ட சுரங்கப் பாதைகள் இன்றும் இங்கு இருப்பதை பயணிகள் பார்க்கலாம்.
சப்போரா கோட்டையை எப்படி அடைவது?
சப்போரா கோட்டை வடக்கு பார்டேஷ் மாவட்டத்தில் உள்ள வாகாத்தோர் கடற்கரைக்கு வெகு அருகிலேயே அமைந்திருக்கிறது. அதோடு 10 கிலோமீஎட்டர் தொலைவில் உள்ள மாபுசா நகரிலிருந்து சப்போரா கோட்டையை சுலபமாக அடைந்து விடலாம்.
மேலும் பாகா, கலங்கூட், பனாஜி, வாஸ்கோ என்று கோவாவின் எந்த பகுதியிலிருந்தும் வாடகை கார்கள் மூலம் சப்போரா கோட்டைக்கு எந்த சிரமமுமின்றி வந்து சேரலாம். இந்தக் கோட்டைக்கு கோடை காலத்தில் சுற்றுலா வருவது சிறந்த அனுபவமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications