Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வால்ப்பாறை » வானிலை

வால்ப்பாறை வானிலை

வால்ப்பாறைக்கு பயணம் செய்ய சிறந்த காலம் மார்ச் முதல் மே வரை, இக்காலத்தில் தட்பவெப்பமும், மழையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் இருக்கின்றன.

கோடைகாலம்

கோடைக்கால தட்பவெப்பம் 15-25 டிகிரி செல்சியசாக இருகின்றது. மழைக்காலத்தின் கடுமையான மழைப்பொழிவை தவிர்த்துவிட்டு, மார்ச் முதல் மே வரை நீடிக்கும் கோடைக்காலத்தில் வால்ப்பாறைக்கு பயணம் செய்வது நல்லது. இதன் பசுமை மயக்குவதாகவும், உங்களை அதின் மடியில் மூழ்கச்செய்வதாகவும் இருக்கின்றது.

மழைக்காலம்

மழைக்காலத்தில் தட்பவெப்பம் மிகவும் குறைவாக, 15 டிகிரிக்களுக்கும் குறைவாக இருக்கின்றது. தென் இந்தியாவில் வால்ப்பாறையே அதிகப்படியான மழைப்பொழிவைப் பெறுகின்றது, சின்னக்கல்லார் அதிலே பெரும்பான்மையான மழைப்பொழிவை பெறுகின்றது. மழைக்காலத்தில் சராசரியாக 350-500 செ.மீ. மழைப்பொழிவை இவ்விடம் பெறுகின்றது.

குளிர்காலம்

குளிர்க்கால தட்பவெப்பம் 0 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக இருக்கின்றது. சராசரி தட்பவெப்பம் 0-10 டிகிரி செல்சியசாக இருக்கிறது. குளிர்க்காலத்தில் வால்ப்பாறைக்கு பயணம் செய்வது பரிந்துரைக்கப்படுவது இல்லை. குளிர் மிகவும் கடுமை அடைந்து, சுற்றுலாவின் மகிழ்ச்சியை உறையச் செய்துவிடும்.