வல்சாத் மாவட்டத்திலுள்ள சிறிய நகரம் சஞ்சான். இந்தியாவில் பார்சிக்கள் வசிக்கும் நகரங்களில் முக்கியமானது இந்நகரம்.ஜொராஷ்டிரியர்கள் ஈரானைவிட்டு வெளியேற்றப்பட்டபோது குஜராத் மாநிலத்திற்கு அகதிகளாக வந்து இங்கு தங்கி இந்நகரத்தை உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது.
தற்போது இங்கு வசிக்கும் பார்சிக்கள் அந்நாளைய ஜொராஷ்டிரியர்களின் வழிவந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. சஞ்சானில் உள்ள சஞ்சான் நினைவுத்தூணை நாம் இன்றும் காணலாம்.
இத்தூண் 1917-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஜொராஷ்டிரியர்கள் எனப்படும் பார்சிக்கள் இந்தியாவிற்கு வந்ததை நினைவுகூறும் வகையில் இத்தூண் நிறுவப்பட்டது.
சஞ்சானில் பார்சிக்கள் நெடுங்காலமாக வசித்து வருவதை உறுதிப்படுத்துவதற்காக இந்நகரத்தில் 2002 ஆண்டிலிருந்து அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



Click it and Unblock the Notifications