வல்சாத் - கோட்டைகளின் கம்பீரமும்! கோயில்களின் ஆன்மீகமும்!

வல்சாத் என்பது குஜராத் மாநிலத்திலுள்ள ஒரு கடலோர மாவட்டம் ஆகும். வல்சாத் என்னும் பெயரானது ஆலமரங்கள் நிறைந்த என்னும் பொருள்தரும் 'வட்- சால்' என்னும் சொற்களிலிருந்து உருவானதாகும். வட் என்றால் ஆலமரம் என்று பொருள். இப்பகுதி முழுதும் ஆலமரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. சஞ்சான் துறைமுகத்தைக் காணும் முன்பாக பார்சிக்கள் இங்குதான் நுழைந்தார்கள்.

வல்சாத், அரபிக்கடல், நவ்சாரி, மற்றும் மஹாராஷ்டிர மாநிலத்தின் டாங்க் மாவட்டம் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. டித்தால் கடற்கரை, சுவாமி நாராயண் கோவில், சாய்பாபா கோவில், சாந்திதாம் கோவில், பர்மேரா கோட்டை, தட்கேஸ்வர் மஹாதேவ் கோவில், ஆகியவை வல்சாத்திலுள்ள சில முக்கிய சுற்றுலாத்தலங்கள்.

தட்கேஸ்வர் ஆலயம் என்று ஏன் பெயர் வந்தது என்றால், இவ்வாலயத்திற்கு மேற்கூரைகள் இல்லை. சூரிய ஒளியானது சிவலிங்கத்தின் மேல் எப்போதும் பட்டுக்கொண்டே இருக்கும். மேலும் இங்கு பலவகையான நிறைய சிவலிங்கங்கள் உள்ளன.

பர்மேரா கோட்டையானது சத்ரபதி சிவாஜியால் கட்டப்பட்டது. பர்மேரா கோட்டை உள்ள பர்மேரா மலை மீது ஆண்டுதோறும், அக்டோபர் மாதத்தில் ஒரு விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழா மிகவும் புகழ்பெற்றதாகும்.

டித்தால் கடற்கரையின் மணல் கருமை நிறமாக காட்சியளிக்கிறது. வல்சாத்தின் காவல் துறைத்தலைமையகத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சிறைச்சாலை உள்ளது. அல்போன்ஸா மாம்பழங்களுக்கு மிகவும் புகழ்பெற்றது வல்சாத்.

இம்மாம்பழங்கள் இங்கு ஹாஃபுஸ் என்று அழைக்கப்படுகின்றன. மும்பை, அகமதாபாத், கான்பூர் போன்ற முக்கிய நகரங்கள் வல்சாத்தை இரயில் பாதை மூலம் இணைக்கின்றன.

வல்சாத் நகரத்திற்கு உள்ளே, பேருந்துகளும், ஆட்டோ ரிக்ஷாக்களும் நிறைய கிடைக்கின்றன. இவை மூலமாக வல்சாத்தின் முக்கிய சுற்றுலாப் பகுதிகளுக்கெல்லாம் சுலபமாக சென்று வரலாம்.

Please Wait while comments are loading...