Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வர்கலா » வானிலை

வர்கலா வானிலை

வர்கலா கடற்கரை நகரம் மிதமான பருவநிலையை கொண்டதாக அமைந்துள்ளது. இருப்பினும் குளிர்காலமே இப்பகுதிக்கு விஜயம் செய்து ரசிக்க ஏற்றதாக உள்ளது. இனிமையான, குளுமையான சூழலுடன் காட்சியளிக்கும் குளிர்காலத்தில் வர்கலாவுக்கு சுற்றுலா மேற்கொள்வது மகிழ்ச்சியை அளிக்கும் அனுபவமாக இருக்கும்.

கோடைகாலம்

வர்கலா கடற்கரை நகரத்தில் கோடைக்காலம் கடுமையான வெப்பம் நிறைந்த சூழலுடன் காட்சியளிக்கிறது. மார்ச் மாதத்தில் துவங்கும் கோடைக்காலம் மே மாதத்தில் முடிவடைகிறது. இக்காலத்தில் பகலில் 32° C முதல் 35° C வரை வெப்பநிலை நிலவுகிறது. இரவு நேரத்தில் வெப்பம் மிகவும் குறைந்தும் காணப்படுகிறது. மே மாதத்தில் மிக அதிக வெப்பமும் நிலவுகிறது. எனவே கோடைக்காலத்தில் இப்பகுதிக்கு சுற்றுலா விஜயம் செய்வது அவ்வளவு சௌகரியமாக இருக்காது.

மழைக்காலம்

ஜூன் மாதத்தில் துவங்கி செப்டம்பர் மாத இறுதி வரை வர்கலா நகரத்தில் மழைக்காலம் நீடிக்கிறது. கடும் மழை இப்பகுதியின் கோடை வெப்பத்தை வெகுவாக தணிக்கிறது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் கூட சிறிது மழை இருக்கக்கூடும் இந்த இரண்டு மாதங்களும் வர்கலாவுக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது.

குளிர்காலம்

வர்கலா கடற்கரை நகரத்தில் டிசம்பரில் துவங்கி பிப்ரவரி வரை குளிர்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் குறைந்தபட்சமாக 22° C முதல் அதிகபட்சமாக 28° C வரை வெப்பநிலை நிலவுகிறது. மேலும், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இனிமையான மற்றும் குளுமையான சூழலுடன் வர்கலா காட்சியளிக்கிறது.