Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வேடந்தாங்கல் » வானிலை

வேடந்தாங்கல் வானிலை

வேடந்தாங்கலை சுற்றிப்பார்க்க சிறந்த பருவம் மழைக்கு பிந்திய ( நவம்பர்) மற்றும் கோடைக்கு முந்திய(மார்ச்) காலங்களாகும். நிறைய புலம் பெயர் பறவைகள் குளிர்காலத்தில் வேடந்தாங்கலுக்கு வருவதால் பறவைகளை பார்ப்பதற்கு இது சிறந்த காலமாக அமைகிறது. ஆண்டின் எந்த நேரத்திலும் பறவைகளை பார்ப்பது சாத்தியமே என்றாலும் முக்கியமாக மழை காலத்தையும் கோடை காலத்தையும் தவிர்ப்பது நல்லது.  

கோடைகாலம்

தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளை போல் வேடந்தாங்கலும் கோடைகாலத்தில் கடுமையான வெப்பம் மற்றும் ஈரப்பதம் கொண்டு காணப்படுகிறது. மே மாதம் ஆண்டின் மிக வெப்பமான மாதம் என்றாலும் கோடை வெப்பம் ஜூன் மற்றும் ஜூலை மாதம் வரை இருக்கிறது. வெப்ப நிலை கோடைகாலத்தில் அதிகபட்சமாக 40 ° C வரை இருப்பதால், பறவைகளை கண்டு களிப்பதற்கு இது ஏற்ற காலமல்ல.

மழைக்காலம்

ஆகஸ்ட் , செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வேடந்தாங்கல் கணிசமான மழை அளவை பெறுகிறது. கடுமையான மழைப்பொழிவு இருப்பதால் இந்த மாதங்களில் சரணாலயத்தை சுற்றி பார்ப்பதற்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. பருவ மழை காலங்களில் இந்த சரணாலயத்தை சுற்றி பார்க்க விருப்பமுள்ளவர்கள் குடை மற்றும் மழை கோட்டை எடுத்து செல்வது நல்லது.

குளிர்காலம்

குளிர்காலம் வேடந்தாங்கலில் நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி இறுதி வரை நான்கு முழு மாதங்களும் தொடர்ந்து நீடிக்கிறது. கால நிலையானது குளிர்ச்சியாகவும் இதமாகவும் அமைந்து பறவைகளை கண்டு களிப்பதற்கு ஏற்றதாக அமைகிறது. வெப்ப நிலை குறைந்த பட்சமாக 16 ° C வரை குறைய வாய்ப்பு உள்ளதால் சுற்றுலா பயணிகள் சற்று லேசான கம்பளி ஆடைகளை எடுத்து செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.