Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வேளாங்கன்னி » வானிலை

வேளாங்கன்னி வானிலை

வேளாங்கன்னிக்குச் செல்ல தகுந்த காலம் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை என்று சொல்லலாம். ஏனெனில் இந்த காலங்களில் வேளாங்கன்னியில் மிதமான வெப்பநிலை இருக்கும். மேலும் இந்த காலங்களில் வேளாங்கன்னியில் பல விழாக்களும் கொண்டாடப்படும். அவை பக்தர்களுக்கும், சுற்றுலா பயனிகளுக்கும் மகிழ்ச்சியையும், இனிமையையும் மற்றும் பரவசத்தையும் வழங்கும்.

கோடைகாலம்

கோடை காலத்தில் வேளாங்கன்னியில் 28° முதல் 38° செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும். கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வேளாங்கன்னிக்கு சுற்றுலா பயணிகள் செல்லாமல் இருப்பது நல்லது.

மழைக்காலம்

ஜூன் முதல் செப்டம்பர் வரை மிதமான மழை வேளாங்கன்னியில் இருக்கும். இந்த காலத்தில் தான் ஏராளமான பக்தர்கள் வேளாங்கன்னிக்கு வருவார்கள்.

குளிர்காலம்

வேளாங்கன்னியின் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர்காலத்தில் வெப்பநிலை 21° முதல் 30° செல்சியஸ் வரை இருக்கும். மேலும் இந்த காலத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இருப்பதால் ஏராளமான பக்தர்கள் குளிர்காலத்தில் வேளாங்கன்னி நோக்கி வருவர்.