வேலூர் பகுதில் குடியாத்தம் நகரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் இந்த மொர்தானா அணை அமைந்துள்ளது. வேலூர் நகரிலிருந்து 31 கி.மீ தூரத்தில் குடியாத்தம் உள்ளது. இந்த அணை 220 மீ நீளமும் 33 மீட்டர் உயரமும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு 10 மாதங்கள் முன்னதாகவே 2000 ஆண்டில் இந்த அணை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு அழகிய சிற்றுலாத்தலமாக இந்த அணைப்பகுதி அறியப்படுகிறது.
இந்த அணைக்கு அருகிலேயே கௌண்டின்யா காட்டுயிர் சரணாலயம், வடபள்ளி ஷீ வெங்கடேஷ்வரா ஸ்வாமி கோயில் மற்றும் கனிப்பாக்கம் போன்ற இதர முக்கியமான, பார்க்க வேண்டிய இடங்களும் அமைந்துள்ளன.



Click it and Unblock the Notifications