வேணூருக்கு பனிக் காலங்களில் சுற்றுலா வருவது சிறப்பானதாக இருக்கும்.
(மார்ச் முதல் மே வரை) : வேணூர் பகுதி கோடைக்காலத்தில் மிக உஷ்ணத்துடனும் ஈரப்பதத்துடனும் அசௌகரியத்தை தரும் விதத்தில் உள்ளது. அச்சமயம் வெப்பநிலை பகலில் அதிகபட்சமாக 38℃ என்ற அளவிலும், குறைந்த பட்ச வெப்பநிலையாக சுமார் 34℃ என்ற அளவிலும் காணப்படுகிறது. ஈரப்பதம் அதிகமாகவும் அசௌகரியாகவும் இருக்கும் இக்காலத்தில் பயணிகள் வேணூர் பகுதிக்கு விஜயம் செய்வதை தவிர்க்கின்றனர்.
(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : தென்மேற்கு பருவக்காற்றின் மூலமாக வேணூர் பகுதி கடுமையான மழைப்பொழிவை இக்காலத்தில் பெறுகிறது. உஷ்ணம் குறைந்து காணப்பட்டாலும் அதிக மழையின் காரணமாக இக்காலத்தில் ஊர் சுற்றிப்பார்ப்பதும் ஸ்தலங்களுக்கு விஜயம் செய்வதும் சிரமமான ஒன்றாகும்.
(டிசம்பர் முதல் ஜனவரி வரை) : வேணூர் பகுதி குளிர்காலத்தின்போது மிக இனிமையான சூழல் மற்றும் மிதமான உஷ்ணத்துடன் காணப்படுகிறது. அச்சமயம் வெப்பநிலை 25℃ -32℃ என்ற அளவில் உள்ளது. அவ்வப்போது சிறு மழைத்தூறலும் இருப்பதால் குளிர்காலம் மிக இனியானதாக விளங்குகிறது.