விதிஷாவில் உள்ள மாலாதேவி கோவில் ஒரு மலையின் சரிவில் அமைந்துள்ள அழகிய இடம். கோவிலில் இருந்து பார்த்தால் காணப்படும் பள்ளத்தாக்கின் காட்சி மயக்கவைக்கும் பேரழகு.
இக்கோவிலின் நுழைவு தாழ்வாரம், முன் பகுதி ஆகியவை அழகுற அமையப்பெற்றுள்ளன. கருவறையில் ஒரு ஜெயின் தீர்த்தங்கரரின் சிலை உள்ளது. 24 தீர்த்தங்கரரின் சின்னத்தை ஒத்த அமைப்பு இங்கு எதுவும் இல்லை என்பதால் இந்த சிலை புத்தர் சிலையாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
வட்டவடிவ பாதையும் ஒரு உயர்ந்த ஷிகாராவும் இங்கு உள்ளது. ஷிகாரா நுணுக்கமாகவும், மிகுந்த சிரத்தையுடன் செதுக்கப்பட்டிருக்கும். ஜெயின் படங்களும், பெண் கடவுளுக்கு அற்ப்பணிக்கப்பட்ட சிற்பங்களும் இங்கு ஏராளம். ஜெயின் சமுதாயத்திற்கு முன்னரே இக்கோவில் மாலாதேவிக்கு சமர்பிக்கப்பட்டது என்று நம்பப்படுகின்றது.



Click it and Unblock the Notifications