பொதுவாக வார்தா நகரம் வெப்பமான கோடைக்காலம், மிதமான குளிர்காலம் கொண்டிருந்தாலும் அடிப்படையாக ஆண்டு முழுவதும் வெப்பமான பிரதேசமாகவே விளங்குகிறது. குளிர்காலம் இங்கு விஜயம் செய்ய ஏற்ற காலமாக உள்ளது. இக்காலத்தில் குளுமையான சூழல் காரணமாக சுற்றிப்பார்ப்பது எளிமையாகவும் மகிழ்ச்சியை தருவதாகவும் உள்ளது.
மார்ச் மே மாதம் வரை நீடிக்கும் கோடைக்காலத்தில் வார்தா பகுதி மிக அதிக உஷ்ணத்துடனும் உள்ளது. இக்காலத்தில் வெப்பநிலை 30°C மத்தியில் சராசரியாக காணப்படுகிறது. சில சமயங்களில் 40°C வரை உயர்ந்தும் அதே சமயம் 28°C வரை குறைந்தும் கூட காணப்படுகிறது. குறிப்பாக மே மாதத்தில் அதிக வெயில் என்பதால் பயணிகள் கோடைக்காலத்தை புறக்கணிப்பது நல்லது.
ஜுன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் வார்தா பகுதியில் மழைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் இப்பகுதி தென்மேற்கு பருவமழை காரணமாக கணிசமான மழையைப்பெறுகிறது. கோடைக்காலத்தின் வெப்பத்திற்கு மாற்றான குளுமையை இப்பிரதேசம் இக்காலத்தில் பெறுகிறது. மழைக்கு பிந்தைய காலமான அக்டோபர் மற்றும் நவம்பர் போன்றவை வார்தாவுக்கு விஜயம் செய்ய ஏற்ற காலமாகும்.
டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும் வார்தா பகுதியில் குளிர்காலம் நிலவுகிறது. தாமதமாக வந்தாலும் இக்குளிர்காலத்தில் வார்தா இனிமையான விரும்பத்தக்க சூழலுடன் காணப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் மிகக்குறைந்தபட்ச வெப்பநிலையாக 15°C வரை காணப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலையாக 28°C வரை இருக்கும்.