சிவாலயம் என்று அழைக்கப்படும் ஸ்ரீ ராஜராஜேஷ்வரா கோவில் யானத்தில் மிகவும் புகழ்பெற்ற வழிபாட்டு ஸ்தலம் ஆகும். கோரங்கி நதி என்று அழைக்கப்படும் அத்ரேயா கோதாவரி நதிக்கரையில் இக்கோவில் அமைந்து இருக்கிறது.
இது 15ஆம் நூற்றாண்டில் சாளுக்கிய சாம்ராஜ்யத்தை சார்ந்த ராஜமகேந்திரவர்மனால் கட்டப்பட்டது, இதன் அலங்கரிக்கப்பட்ட சிலைகள் அக்காலகட்டத்தை வெளிப்படுத்துகின்றது.
கல்யாணோத்சவம் மற்றும் ரதோத்சவம் ஆகிய இரண்டு திருவிழாக்கள் இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் (மகா மாதம்) நிகழும் கல்யானோத்சவ திருவிழாவில் ஸ்ரீ ராஜராஜேஷ்வர மாப்பிள்ளை கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு தெருக்களில் பவனியாக எடுத்துச்செல்லப்படுவார்.
இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக சாமி சிலையை பாரம்பரிய அலங்காரத்தோடு பெரிய ரதங்களில் பக்தர்கள் இழுத்துச்செல்வது ரதோத்சவம் ஆகும்.



Click it and Unblock the Notifications