ஷேக்-உல்-ஆலம் விமான நிலையம் என்று பிரபலமாக அழைக்கப்படும் ஸ்ரீநகர் விமான நிலையமே, யஸ்மார்க்குக்கு அருகாமையில் அமையப்பெற்றுள்ள விமான நிலையம் ஆகும். இந்நிலையம், நாட்டின் முக்கிய நகரங்களான, டெல்லி, மும்பை, சண்டிகர் மற்றும் ஷிம்லா மட்டுமல்லாது பிற நகரங்களுடனும், விமானங்கள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையமே, யஸ்மார்க்குக்கு அருகாமையில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையம் ஆகும். இது, ஸ்ரீநகரிலிருந்து சுமார் 876 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. விமான நிலையத்திலிருந்து, டாக்ஸி அல்லது பேருந்துகள் மூலம் யஸ்மார்க் செல்லலாம்.