அடூர் நகரிலிருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் கொச்சி பன்னாட்டு விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூர், டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களுக்கு தினமும் எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே நீங்கள் இந்த விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த பிறகு வாடகை கார்கள் மூலம் சுலபமாக அடூர் நகரத்தை அடைந்து விடலாம்.