அகும்பே வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஓநேக் அபி அருவி முக்கியமானது. இது அகும்பேவிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் உச்சிப் பகுதிக்கு செல்வதற்கு வசதியாக படிகள் இருப்பதால் பயணிகள் எந்த சிரமமுமின்றி அருவியின் உச்சியை அடையலாம்.
அதோடு உச்சத்திலிருந்து கொட்டிக்கொண்டிருக்கும் அருவியின் அற்புதக் காட்சியையும் மக்கள் கண்டு ரசிக்கலாம். இந்த ஓநேக் அருவி என்ற வார்த்தையில் முதிலில் உள்ள ஒநேக் என்பது கன்னட வார்த்தையாகும். இதற்கு தமிழில் 'உரல்' என்று அர்த்தம்.



Click it and Unblock the Notifications