1992ம் ஆண்டு மறைந்த ஷீ ஆனந்த் ரிஷிஜி மஹாராஜ் அவர்கள் ஞாபகார்த்தமாக இந்த ஆனந்த் தாம் கட்டப்பட்டுள்ளது. ஷிரல் சிச்சொண்டி எனும் இடத்தில் பிறந்த இந்த யோகி தனது 13ம் வயதில் ஷீ ரத்தன் ரிஷிஜி மஹாராஜ் மூலம் ஆன்மீக தத்துவங்களும் போதனைகளும் கிடைக்கப்பெற்றார்.
சமுதாய மேம்பாட்டுக்காக ஷீ ஆனந்த் ரிஷிஜி மஹாராஜ் அவர்கள் பல கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆன்மீக மையங்களை அஹமத்நகரில் நிறுவியுள்ளார். அன்பு, சகிப்புத்தன்மை, நேர்மை போன்ற கருத்துக்களை பரப்பிய இவர் பிணியில் வாடியோர்க்கும் வறியோர்க்கும் உதவிகளை அளித்து வாழ்ந்துள்ளார்.
சிறந்த எழுத்தாளரான இவர் பல மராத்தி மற்றும் ஹிந்தி பத்திரிகைகளில் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications