தியானேஷ்வர் என்று பிரசித்தமாக அறியப்படும் இந்த அணை முல்லா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. அஹமது மாவட்டத்துக்கு அருகில் ராஹுரி தாலுக்காவில் இது உள்ளது.
அஹமதுநகர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு நீராதாரமாக விளங்கும் இந்த அணை 26 டி.எம்.சி நீரை தேக்கி வைக்கும் கொள்ளளவைக் கொண்டுள்ளது. பத்தார்டி, நேவாசா, ஷேவ்காவ்ன் மற்றும் ராகுரி தாலுக்காக்களுக்கு விவசாயப்பாசனத்துக்கு இது உதவுகிறது.
இந்த அணையை சுற்றிலும் இயற்கை எழில் வாய்ந்த பகுதிகள் காணப்படுவதோடு இங்கு படகுச்சவாரிக்கான வசதிகளும் உள்ளன. குடும்பத்துடன் சிற்றுலா சென்று மகிழ்வதற்கு ஏற்ற இடம் இந்த முல்லா அணைப்பகுதியாகும்.



Click it and Unblock the Notifications