டாங்க் மியூசியம் என்று அழைக்கப்படும் இந்த அருங்காட்சியகத்தின் முழுப்பெயர் ‘காவல்ரி டாங்க் மியூசியம்’ என்பதாகும். இது அஹமத் நகரில் ‘ஆர்மர்ட் கார்ப்ஸ் செண்டர் அண்ட் ஸ்கூல்’ அருகில் அமைந்துள்ளது.
1994ம் ஆண்டு இந்த மியூசியம் மறைந்த ஜெனரல் பி.சி. ஜோஷி (முன்னாள் ராணுவதளபதி மற்றும் டாங்க் வீரர்) அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. ஆசியாவிலேயே இதுபோன்ற முதல் மியூசியம் எனும் சிறப்பை இந்த மியூசியம் பெற்றுள்ளது.
பலவகை ஆட்சியாளர்களால் உபயோகப்படுத்தப்பட்ட சிறப்பான டாங்குகளின் சேகரிப்பை இந்த மியூசியம் கொண்டுள்ளது. டிராக்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ள மார்க் – 1 எனப்படும் ஒரு வகை டாங்க் முதல் உலகப்போரில் பயன்படுத்துள்ளது.
அது இங்கு ஒரு முக்கியமான காட்சிப்பொருளாக உள்ளது. நார்மண்டி ஊடுறுவலின்போது இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய டாங்குகளும் இங்கு பிரசித்தமாய் உள்ள அம்சமாகும்.



Click it and Unblock the Notifications