இந்த பேட் ஹனுமான் ஜி கோயில் அலாகாபாத் நகரத்தில் உள்ள மற்றொரு எளிமையான ஆஞ்சநேயர் கோயிலாகும். உள்ளூர் மக்கள் இந்த கோயிலின் ஹனுமான் சிலைக்கு அபூர்வ சக்திகள் இருப்பதாக நம்புகின்றனர்.
சொல்லப்பட்டு வரும் கதைகளின்படி ஒரு பணக்கார வணிகர் இந்த ஹனுமான் சிலையை வடித்து அதை தன்னுடன் எடுத்துக்கொண்டு வட இந்திய ஆன்மீக ஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டதாகவும், பயணத்தின்போது அவர் கனவில் தோன்றிய ஹனுமான் தன்சிலையை இந்த குறிப்பிட்ட ஸ்தலத்தில் விட்டுச்செல்லுமாறு கேட்டுக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
வருடங்கள் கழித்து பாலகிரி என்பவர் அந்த சிலையை கண்டறிந்து கோயிலை உருவாக்கி ஸ்தாபித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த இடத்தில் சிலையை விட்டுச்சென்றபின் அந்த வணிகரின் வாழ்நாள் ஆசைகள் எல்லாம் நிறைவேறியதாகவும் சொல்லப்படுகிறது.
அதோ போன்று தங்கள் விருப்பங்கள் எல்லாம் நிறைவேற பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் இந்த கோயிலுக்கு விஜயம் செய்து வழிபடுகின்றனர்.



Click it and Unblock the Notifications