Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அலகாபாத் » ஈர்க்கும் இடங்கள் » குஸ்ரோ பாக்

குஸ்ரோ பாக், அலகாபாத்

41

குஸ்ரோ பாக் எனும் இந்த தோட்டப்பூங்கா சுற்றுச்சுவர் அமைப்போடு கூடிய ஒரு அழகிய நந்தவனமாகும். இது அலாகாபாத் ஜங்க்ஷன் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது.

முகாலாய மன்னர் ஜஹாங்கீர் குடும்பத்தாரின் மூன்று கல்லறைகள் இந்த பூங்காவிற்குள் அமைந்திருக்கின்றன. குஷ்ரோ மிர்ஸா (ஜஹாங்கீர் மன்னரின் மூத்த மகன்), ஷா பேகம் (ஜஹாங்கீர் மன்னரின் முதல் மனைவி) மற்றும் இளவரசி சுல்தால் நிதார் பேகம்(ஜஹாங்கீர் மன்னரின் மகள்) ஆகியோரது கல்லறைகளை இந்த பூங்கா வளாகத்தின் உள்ளே காணலாம். 17ம் நூற்றாண்டில் இந்த கல்லறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ள இந்த கல்லறைகள் முகலாயர் கால கட்டிடக்கலை அம்சங்களோடு காட்சியளிக்கின்றன. நாட்டிலிருந்த மிகச்சிறந்த கலைஞர்களைக்கொண்டு இந்த கல்லறைகளை ஜஹாங்கீர் மன்னர் எழுப்பியதாக சொல்லப்படுகிறது.

ஜஹாங்கீரின் மூத்தமகன் அவரது சகோதரர் ஷாஜஹானால் கொல்லப்பட்டிருக்கிறார். அவரது தாய் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

மரணம் எப்படி நிகழ்ந்திருந்தாலும் கல்லறைகள் பெரும் செலவில் ராஜ மரியாதையுடன் எழுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பூங்கா முழுவதும் செழுமையான மாமரங்கள் மற்றும் கொய்யா மரங்களால் நிரம்பி அழகுடன் காட்சியளிக்கின்றது

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue