அலாகாபாத் நகரில் உள்ள இரண்டு சக்தி பீடங்களில் இந்த லலிதாதேவி கோயிலும் ஒன்றாகும். புராணக்கதைகளின்படி சதி தேவியின் விரல்கள் இங்கு யமுனை நதிக்கரையில் விழுந்தபோது பகவதி லலிதா தேவி தோன்றியதாக சொல்லப்படுகிறது.
காலப்போக்கில் இந்த கோயில் பல முறை புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. கடைசியாக 1987ம் வருடம் இது புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. 103 அடி உயரமுள்ள இந்த கோயில் 103 அடி உயரமுள்ள வாசலை கொண்டுள்ளது.
வருடம் முழுதும் பக்தர்களை ஈர்க்கும் இந்த கோயிலில் நவராத்தியின் போது இன்னும் திரளாக பக்தர்கள் கூடுகின்றனர். அச்சமயம் சக்தியின் ஒன்பது அவதாரங்களும் அலங்கரிக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.



Click it and Unblock the Notifications