Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அம்ராவதி » வானிலை

அம்ராவதி வானிலை

கோடைகாலம்

மார்ச்சிலிருந்து மே மாதம் வரை நீடிக்கும் கோடைக்காலத்தில் அம்ராவதி பகுதி பெரும்பாலும் மிகக்கடுமையான வெப்ப நிலையையும், ஈரப்பதத்தையும், வறட்சியையும் கொண்டதாக உள்ளது. இக்காலத்தில் வெப்பநிலை 320C முதல் 400C வரை காணப்படுகிறது. மிக அசௌகரியமாக காணப்படும் கோடைக்காலத்தில் அம்ராவதி பகுதிக்கு பயணம் மேற்கொள்வது தவிர்க்கவேண்டிய ஒன்றாகும்.

மழைக்காலம்

ஜுன் முதல் அக்டோபர் மாதம் வரை அம்ராவதி பகுதி கணிசமான மழையை தென்மேற்கு பருவ மழை மூலம் பெறுகிறது. புயல் சின்னங்களும் தாழ்வழுத்தங்களும் இக்காலத்தில் அம்ராவதி  பிரதேசத்தில் காணப்படுகின்றன.

குளிர்காலம்

அக்டோபர் மத்தியிலிருந்து மார்ச் வரை நீடிக்கும் குளிர்காலத்தில் அம்ராவதி பகுதி குளுமையான சீதோஷ்ண நிலையுடன் காணப்படுகிறது. சராசரியாக வெப்பநிலை 240C முதல் 250C வரை காணப்பட்டாலும் சில சமயம் 150C வரை கூட குறைகிறது. இனிமையான சூழலுடனும் காணப்படும் இப்பருவம்  அம்ராவதிக்கு பயணம் மேற்கொள்ளவும் சுற்றிப்பார்க்கவும் உகந்ததாய் உள்ளது. இக்காலத்தில் சிறு தூறல்களும் இப்பகுதியில் காணப்படுகின்றன.