அனந்த்நாக்கிலிருக்கும் முக்கியமான சுற்றுலாத் தலங்களின் ஒன்று தான் இந்த ஆயிஷ்முகம் கோவில். 15-ஆம் நூற்றாண்டில், ஷேக் நூர்-செயின்-உட்-டின் ரேஷி அவர்களின் பிரதான சிஷ்யரான 'ஷேக் செயின்-உட்-டின்' நினைவாக கட்டப்பட்டது.
ஆயிஷ்முகம் நகரத்தில் உள்ள மலைகள் தான் ஒரு காலத்தில் ஹஸ்ரட் செயின் உட் டின் வாலியின் வாழிடமாக இருந்தது. எனவே இந்த இடத்தை ஒரு புனித ஸ்தலமாக மக்கள் பார்க்கின்றனர்.
தன் வாழ் நாள் முழுவதையும் அல்லாஹ்விற்காக அர்ப்பணித்தவராக ஷேக் செயின்-உட்-டின் போற்றப்படுகிறார். அவர் அங்குள்ள ஒரு குகையை விட்டு வெளியே வராமல், உள்ளூர் மக்களுக்கு அல்லாஹ்வை பற்றி போதனைகள் செய்தார். ஆயிஷ்முகம் கோவிலில் உர்ஸ் மற்றும் ஜூல் திருவிழாக்களின் போது பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.



Click it and Unblock the Notifications