ஆலியில் பனிச்சறுக்கு செய்வது தவிர மலையேற்றம் செய்வதும் மற்றுமொரு முதன்மையான சுற்றுலா நடவடிக்கையாக மலையேற்றம் இருக்கிறது. பிரமிக்க வைக்கும் இமயமலைத் தொடர்களில் மலையேற்றம் செய்ய மிகவும் ஏற்ற வகையிலான சரிவுகளை ஆலி கொண்டிருக்கிறது.
இங்குள்ள 3 கிமீ நீளமுடைய ஒரு மலையேற்ற பாதையில் சுற்றுலாப் பயணிகள் இமயமலையின் அற்புதமான சுற்றுவட்டக் காட்சிகளை காண இயலும். இந்த பாதை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2519 மீ முதல் 3049 மீ உயரம் வரை பரவியிருக்கிறது.
இந்த பாதையில் செல்லும் போது நந்தா தேவி, காமட், மனா பர்வதம் மற்றும் துனாகிரி ஆகிய சிகரங்களின் அற்புதமான காட்சிகளைக் காண இயலும்.
ஆலியிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஜோஸிமாத் அழைத்துச் செல்லும் பாதை மிகவும் புகழ் பெற்ற மலையேற்ற சரிவாகும். நந்தா தேவி சிகரத்தில் சூரியன் உதயமாகும் அற்புதமான காட்சியை காணும் வாய்ப்பு இந்த பாதையில் செல்லும் போது கிடைக்கும்.
ஆலியில் உள்ள இதர பிரபலமான குறுகிய தூர மலையேற்றப் பாதைகளாக கோர்சோன், டாலி, குவாரி கணவாய் மற்றும் தபோவனம் ஆகியவை உள்ளன.



Click it and Unblock the Notifications