ஹரித்வாரில் உள்ள ஹர் கி பைடியைப் போலவே நயா காட்டில் உள்ள படிகட்டுகள் தான் ராம் கி பைடி. அயோத்யாவில் உள்ள சர்யு நதிக்கரையில் அமைந்துள்ள இந்த இடத்திற்கு பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் வரலாற்றுப் பின்னணி கொண்ட இந்த புனித நதியில் நீராடவும் செய்வர்.
இந்த இடத்தில் இருந்த முதன்மை படிக்கட்டுக்கள் (பைடிகள்) ஒரு காலத்தில் பெய்த பேய் மழையாலும், ஆற்றில் ஓடிய வெள்ளத்தாலும் அடித்துச் செல்லப்பட்டது.
பின்னர் இந்த காட்டில் 1984-1985 இல் அப்போதைய முதல் அமைச்சர் ஸ்ரீ ஸ்ரீபதி மிஸ்ரா மற்றும் நீர் பாசான அமைச்சர் அவர்களின் கூட்டு முயற்சியால் புதிய படிகட்டுகள் அமைக்கப்பட்டன.
இந்த காட்டிற்கு தேவையான தண்ணீர் சர்யு நதியிலிருந்து மின்னிறைப்பி உதவியுடன் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனை பராமரிக்கும் பொறுப்பு உத்திர பிரதேச அரசாங்கத்தில் உள்ள நீர்ப்பாசான துறையின் வெள்ளக் கட்டுப்பாட்டு பிரிவிடம் உள்ளது.
ஸ்ரீ ராமருக்கு நடத்தப்படும் அனைத்து விழாவின் போதும் இந்த இடத்தில் கூட்டம் அலை மோதும். சர்யு நதியின் புனித நீரில் நீராட பக்தர்கள் வரிசையில் நின்று தலை முழுகுவர். அப்படிச் செய்தால் அவர்களின் பாவம் தீரும் என்று நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications